இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்திய சந்தையில் டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்காக டாடா நிறுவனம் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், முக்கியமான கார்கள குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டாடா பன்ச் (Tata Punch)

இந்திய சந்தையில் வரும் அக்டோபர் 18ம் தேதி டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடன் மட்டுமே டாடா பன்ச் கார் கிடைக்கும். அது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இந்த காரின் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாயாக மட்டுமே (எக்ஸ் ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா பன்ச் கார், முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டாடா பன்ச் சிஎன்ஜி (Tata Punch CNG)

நாங்கள் ஏற்கனவே கூறியபடி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின் தேர்வில் மட்டுமே டாடா பன்ச் கிடைக்கும். ஆனால் எதிர்காலத்தில் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான செலவில் காரை இயக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG)

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக டாடா நிறுவனம் கடந்த ஆண்டு சிறிய டீசல் இன்ஜின்களை (1.05 லிட்டர் இன்ஜின்) கைவிட்டது. எனவே அதற்கு பதிலாக தனது ஒரு சில கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி டியாகோ காரின் சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டாடா டியாகோ காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது ஒரு சில முறை கேமரா கண்களில் டாடா டியாகோ சிஎன்ஜி கார் சிக்கியுள்ளது. வரும் மாதங்களில் டாடா டியாகோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் (Tata Altroz EV)

டாடா நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் உள்ள தனது ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி டிகோர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகியவை ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

இதன்படி ஏற்கனவே விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை விட பெரிய பேட்டரியை அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் பெறும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் டிசைனானது, வழக்கமான ஐசி இன்ஜின் காரின் டிசைனை போலவேதான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

ஆனால் டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வழக்கமான ஐசி இன்ஜின் அல்ட்ராஸ் காரில் உள்ள அதே வசதிகள்தான் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என தெரிகிறது. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் கூடிய விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

அப்போது நமது சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை கிடைத்து விடும். டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதனை படைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தன்வசம் வைத்துள்ளது. அதனை டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் தட்டி பறிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விலையை மட்டும் டாடா நிறுவனம் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் நிச்சயம் விற்பனையில் சாதனை படைக்கும்.

இதுக்குதான் வெயிட் பண்றோம்... தரமான சம்பவத்தை செய்ய போகும் டாடா... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!

டாடா நிறுவனம் தொடர்ந்து பாதுகாப்பான கார்களை அறிமுகம் செய்து வருவதால், அந்த நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், இவ்வளவு டாடா கார்கள் விற்பனைக்கு வரிசை கட்டி நிற்பது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Upcoming tata cars punch tiago cng altroz ev
Story first published: Friday, October 15, 2021, 16:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X