சியாராவும் வரப்போகுது... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

இந்திய சந்தையில் டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இதுதவிர மேலும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அந்த கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

அதிக ரேஞ்ச் கொண்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (High-range Nexon EV)

தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதைக்காட்டிலும் அதிக ரேஞ்ச் கொண்ட வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் களமிறக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் (Altroz EV)

இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வரும் டாடா அல்ட்ராஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜிப்ட்ரான் பவர்ட்ரெயின் (Ziptron Powertrain) உடன் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை விட பெரிய பேட்டரி தொகுப்பை டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும் என தெரிகிறது. எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை விட டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் அதிகமாக இருக்கலாம்.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10-12 லட்ச ரூபாயாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன். அனேகமாக நடப்பு ஆண்டு இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV)

புத்தம் புதிய டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி ரக கார் தற்போதுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்பார்ம் அடிப்படையில் பன்ச் கார் உருவாக்கப்பட்டுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் காரை போலவே, டாடா பன்ச் காரும் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. அத்துடன் டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை போல், டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

சியாரா எலெக்ட்ரிக் கார் (Sierra EV)

முதல் 'மேட் இன் இந்தியா' எஸ்யூவி என்ற பெருமையை டாடா சியாரா பெறுகிறது. கடந்த 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா சியாரா காரின் உற்பத்தி கடந்த 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இது இந்தியர்களால் மறக்க முடியாத கார் ஆகும். இந்த சூழலில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், சியாரா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

இந்த கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரிக்கு புத்துயிர் வழங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் சியாரா காரும் எலெக்ட்ரிக் வடிவில் விற்பனைக்கு வந்தால் பெரும் வரவேற்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

இவிஷன் (EVision)

ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில், இவிஷன் கான்செப்ட் செடான் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. இது ஒமேகா பிளாட்பார்ம் அடிப்படையிலான கார் ஆகும். ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் என மொத்தம் 2 எலெக்ட்ரிக் மோட்டார்களை இவிஷன் கான்செப்ட் செடான் பெற்றிருந்தது.

சீக்கிரம் லான்ச் பண்ணுங்க தல... டாடா அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள்... ஒவ்வொன்னும் சூப்பரா இருக்கே!

இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 350க்கும் அதிகமான கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவிஷன் கான்செப்ட் மாடலையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Upcoming tata electric cars altroz ev to punch ev
Story first published: Monday, October 18, 2021, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X