2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

புதிய லோகோ உடன் அப்டேட் செய்யப்பட்ட 2021 கியா செல்டோஸ் மற்றும் சொனெட் கார்கள், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன.

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

கியா இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் அதன் செல்டோஸ் மற்றும் சொனெட் மாடலின் அப்டேட் வெர்சன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த காருக்களுக்கான முன்பதிவுகள் ரூ.25,000 என்ற முன்பதிவு தொகையுடன் நடைபெற்று வருகின்றன.

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

இந்த நிலையில் தான் தற்போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்படுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த புதிய சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களின் படங்கள் கிடைத்துள்ளன.

Image Courtesy: Nagarjuna

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் டெலிவிரிக்காக காத்திருக்கும் கால அளவுகள் 20 வாரங்கள் வரையில் தற்சமயம் உள்ளன. இந்தியாவில் கியாவின் புதிய லோகோவை பெற்ற முதல் மாடல்களாக இவை உள்ளன.

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

2021 கியா செல்டோஸின் விலைகள் ரூ.9,95,000 வரையில் உள்ளன. இது இதன் எச்டிஇ வேரியண்ட்டின் விலையாகும். அதிகப்பட்சமாக செல்டோஸின் விலை அதன் ஜிடிஎக்ஸ்+ 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்கிற்கு ரூ.17,65,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

செல்டோஸின் எச்டிகே+ டீசல் வேரியண்ட்டிற்கு வழங்கப்பட்டு வந்த 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த என்ஜின் & ட்ரான்ஸ்மிஷன் தேர்வு புதிய செல்டோஸின் எச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

மேலும் புதிய 1.4 டி-ஜிடிஐ பெட்ரோல் ஜிடிஎக்ஸ் (O) என்ற வேரியண்ட்டையும் செல்டோஸில் கியா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இவை எல்லாவற்றையும் மிக முக்கிய அம்சமாக இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு 2021 செல்டோஸின் எச்டிகே+ வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

இந்த ட்ரான்ஸ்மிஷன் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் வழங்கப்படுகிறது. இவை தவிர்த்த மற்ற வேரியண்ட்கள் செல்டோஸில் அப்படியே தொடரப்பட்டுள்ளன. இதன் டாப் வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வந்த சில வசதிகள் விலை குறைவான வேரியண்ட்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன.

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

மொத்தமாக 17 புதிய வசதிகளை, வேரியண்ட்களை பொறுத்து புதிய செல்டோஸ் மாடல் பெற்றுள்ளது. 2021 செல்டோஸை போல் அப்டேட் செய்யப்பட்ட சொனெட்டிலும் சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

2021 கியா செல்டோஸ் & சொனெட்டை புக் செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்!! இந்தியாவில் டெலிவிரிகள் துவங்கின...

அதற்கு ஏற்றாற்போல், ஒரு இண்டெலிஜண்ட் மேனுவல் வேரியண்ட்டை சேர்த்து மொத்தம் 4 வேரியண்ட்கள் புதியதாக சொனெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வேரியண்ட்களின் வரிசையை ஒழுங்குப்படுத்தும் அதேநேரத்தில் சொனெட்டில் வழங்கப்பட்டு வந்த சில தொழிற்நுட்ப வசதிகளையும் கியா அப்டேட் செய்துள்ளது.

Most Read Articles

மேலும்... #கியா #kia
English summary
2021 Kia Sonet, Seltos New Logo Variant Delivery Starts – Waiting Up To 20 Weeks.
Story first published: Sunday, May 16, 2021, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X