இந்தியர்களும் இனி அமெரிக்க எலக்ட்ரிக் செடான் காரை வாங்கலாம்!! ட்ரைடன் என்4 விற்பனைக்கு வருகிறது...

அமெரிக்காவை சேர்ந்த ட்ரைடன் எலக்ட்ரிக் வாகன நிறுவனம் இந்தியாவில் என்4 செடான் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ட்ரைடன் நிறுவனம் மற்றும் அதன் என்4 எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியர்களும் இனி அமெரிக்க எலக்ட்ரிக் செடான் காரை வாங்கலாம்!! ட்ரைடன் என்4 விற்பனைக்கு வருகிறது...

ட்ரைடன் என்4, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் செடான் காராகும். இந்த எலக்ட்ரிக் கார் நான்கு வெவ்வேறான வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக ட்ரைடன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களும் இனி அமெரிக்க எலக்ட்ரிக் செடான் காரை வாங்கலாம்!! ட்ரைடன் என்4 விற்பனைக்கு வருகிறது...

அதுமட்டுமின்றி வெறும் 100 யூனிட்களில் அதி-செயல்திறன் கொண்ட லிமிடேட் எடிசனிலும் என்4 நம் நாட்டில் சந்தைப்படுத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரைடன் என்4 காரில் 75 kWh மற்றும் 100kWh பேட்டரி என்ற இரு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்த பேட்டரிகளில் காரை அதிகப்பட்சமாக 523கிமீ மற்றும் 696கிமீ தூரத்திற்கு இயக்கி செல்லலாம் என ட்ரைடன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அமெரிக்க எலக்ட்ரிக் கார் நிறுவனம் என்4-ஐ இந்திய சந்தைக்கு ஏற்ப ரூ.35 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

இந்தியர்களும் இனி அமெரிக்க எலக்ட்ரிக் செடான் காரை வாங்கலாம்!! ட்ரைடன் என்4 விற்பனைக்கு வருகிறது...

இதற்கு மத்தியில் இந்த மாடலுக்கான முன்பதிவுகளையும் ட்ரைடன் ஏற்க துவங்கிவிட்டது. என்4 எலக்ட்ரிக் செடான் காரில் பொருத்தப்படவுள்ள பேட்டரிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டங்களுக்கான ஆற்றல் சேமிப்பு அமைப்பிற்காக இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ட்ரைடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

உலகளவில் பெரிய ஆட்டோமொபைல் சந்தைகளுள் இந்தியாவும் ஒன்று. இதனால் நம் நாட்டில் சந்தையை விரிவுப்படுத்த இந்த அமெரிக்க எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ஆவலாக உள்ளது. இதற்காக சில வலிமையான திட்டங்களையும் இந்த நிறுவனம் தயார்படுத்தி வைத்துள்ளது.

இந்தியர்களும் இனி அமெரிக்க எலக்ட்ரிக் செடான் காரை வாங்கலாம்!! ட்ரைடன் என்4 விற்பனைக்கு வருகிறது...

அதில் ஒரு பகுதியாக பாரத் எலக்ட்ரானிக்ஸ் போன்று இந்தியாவில் விற்பனை மாடல்களை தயாரிக்கவும், மற்ற பணிகளுக்காகவும் இந்தியாவில் வேறு சில நிறுவனங்களுடன் கூட்டணி ஏற்படுத்தி கொள்ளவும் ட்ரைடன் எதிர்நோக்கியுள்ளது.

ட்ரைடன் எலக்ட்ரிக், சோலார் பேனல் மற்றும் பேட்டரி என்ஜீனியரீங்கில் முதன்மையான நிறுவனமாக விளங்கும் ட்ரைடன் சோலாரின் புதிய துணை நிறுவனமாகும். இத்தகைய நிறுவனம் இந்திய சந்தையில் நுழையவுள்ளதை பிரபல அமெரிக்க செய்திதளம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
US-based Triton set to enter Indian market with N4 electric sedan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X