ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

ஜோ பைடனின் கடில்லாக், புதினின் அவுரஸ் செனட் இரு கார்கள் குறித்த சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம்.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த புதன்கிழமை (ஜூன் 16) அன்று சுவிட்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், அமெரிக்கா சார்பில் அந்நாட்டி ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்யா சார்பில் அந்நாட்டு அதிபர் புதின் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

இந்நிகழ்வின்போது இருவரும் அவரவர்களுடைய கார்களிலேயே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்த இரு கார்களும் மிகவும் பிரமாண்ட உருவம் கொண்டவை மட்டுமல்ல, அதிக சக்தி வாய்ந்ததும் கூட. அதாவது, இரு கார்களும் துப்பாக்கி குண்டு மழை, கன்னி வெடிகுண்டு தாக்குதல் என எதுவாக இருந்தாலும் சமாளிக்கும் திறன்மிக்கவை.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

நாட்டு முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு கருதி பல மில்லியன் டாலர்கள் செலவில் இரு கார்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற அக்கார்கள்குறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

ஜோ பைடன் கடில்லாக் லிமோசைன்:

ஜோ பைடனுக்கான மற்றுமொரு கோட்டையாக கடில்லாக் லிமோசைன் கார் இருக்கின்றது. அதிக பாதுகாப்பு திறன் வசதிகள் இக்காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் தெளிவான பார்வை வழங்கும் கேமிராக்கள், கண்ணீர் புகைக்குண்டு, தொடர்பு கொள்ளும் வசதி, ஆக்சிஜன் வசதி, தானாக இயங்கும் தீயணைப்பான்கள், சிறிய ரத்த வங்கி, உள்ளிருப்போரை பார்வையிட முடியாத வசதி என பிரம்மிப்பின் உச்சத்திற்கேக் கொண்டு செல்லும் வகையில் எக்கசக்க சிறப்பு வசதிகள் கடில்லாக் லிமோசைன் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

எனவேதான் பலர் இதனை மிருகம் (Beast) என குறிப்பிடுகின்றனர். இக்காரை வடிவமைத்தது ஜெனரல் மோட்டார்ஸ் ஆகும். அலுமினியம், டைட்டானியம் மற்றும் செராமிக் ஆகிய கலவைகளால் உருவாக்கப்பட்டதே கடில்லாக் லிமோசைன். இக்கார் 20 ஆயிரம் பவுண்ட் எடைக் கொண்டது.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

8இன்சிலான குண்டுத் துளைக்காத வண்ணம் இதன் உடற்கூடு உருவாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டை மட்டுமல்ல வெடிகுண்டுகளின் தாக்கத்தைக்கூட இது தாங்கும். இதன் கண்ணாடிகள் ஐந்து அடுக்குகளால் உருவாக்கப்பட்டவை. மூன்று அங்குலம் அளவுள்ள இதனை எந்த துப்பாக்கியின் குண்டாலும் துளைக்க முடியாது.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

கடில்லாக் லிமோசைன் காரின் கதவுகள் போயிங் 757 விமானங்களில் இடம் பெற்றிருப்பதைப் போன்று அதிக உறுதியான மற்றும் பாதுகாப்பானது ஆகும். இதன் டயர்களும் அதிக உறுதியானவை ஆகும். நெருப்பு மற்றும் கூரான ஆணிகளுக்கு இது அசராது. அதாவது பஞ்சரும் ஆகாது, அவ்வளவு எளிதில் நெருப்புக்கும் இரையாகாது. இத்தகைய திறன் கொண்டதே கடில்லாக் காரின் டயர்கள்.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

காரின் எரிபொருள் தொட்டியிலும் இதேபோன்று பாதுகாப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கும் புல்லட் எதிர்ப்பு மற்றும் நெருப்பு திறன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, அதிபர் அமர்ந்து செல்லும் பகுதி தனியறை போன்றது.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

இதில், எவராலும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது. இதில், ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ஜெனரல் மோட்டார்ஸ் இந்த காரில் 5.0 லிட்டர் டீசல் எஞ்ஜினை பயன்படுத்தி வருகின்றது. இது என்ன மாதிரியான எஞ்ஜின் திறனை வெளியேற்றும் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேசமயம், இக்கார் 3 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

விளாடிமிர் புதின் அவரஸ் செனட் லிமோசைன்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடில்லாக் லிமோசைன் காருக்கு இணையான வசதிகளைக் கொண்டதாக ரஷ்யாவின் ஜனாதிபதி அவுரஸ் செனட் லிமோசைன் கார் இருக்கின்றது. இந்த காரை ரஷ்யா சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான நமி உருவாக்கியிருக்கின்றது. இது ஒட்டுமொத்தமாக 21.7 அடி நீளம் மற்றும் 14,330 பவுண்ட் எடைக் கொண்டது.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

இக்காரில் ஹைபிரிட் வசதிக் கொண்ட 4.4 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 598 பிஎ:்பி திறநை வெளியேற்றக் கூடியது. இந்த எஞ்ஜினை மேலும் அதிக திறன் கொண்டதாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

அதாவது, 6.6 லிட்டர் வி12 எஞ்ஜின் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது, 857 எச்பி திறனை வெளியேற்றும் திறன் கொண்டது. இக்காரின் ஒட்டுமொத்த மதிப்பு 2,45,000 அமெரிக்க டாலர்கள் ஆகும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லிமோசைன் கார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலரில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

ஜோ பைடனின் கடில்லாக் - விளாடிமிர் புதினின் அவுரஸ் செனட்... இரு கார்களில் எது செம்ம கெத்து தெரியுமா?..

அவுரஸ் செனட் கார் நீருக்குள் மூழ்கினாலும் அதற்குள் இருக்கும் நபர்களை பாதுகாக்கும் திறன் கொண்டது கூடுதல் சிறப்பு வசதியாக இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல வசதிகள் இக்காரில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், அவைகுறித்த முழு விபரங்களை ரஷ்யா அரசு வெளியிடவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Vladimir Putin's Aurus Senat vs Joe Biden's Cadillac: Which One Is Best. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X