மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அதன் இரு பிரதான இந்திய மாடல்களான போலோ மற்றும் வெண்டோ கார்களின் விலைகளை இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், அதன் போலோ ஹேட்ச்பேக் மற்றும் வெண்டோ செடான் கார்களின் விலைகளை தலா 3 சதவீதம் மற்றும் 2 சதவீதம் உயர்த்துவதாக தற்போது ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

இந்த விலையுயர்வு இந்த இரு ஃபோக்ஸ்வேகன் கார்களின் வேரியண்ட்கள் அனைத்திற்கும் (போலோ ஜிடி ட்ரிம்-ஐ தவிர்த்து) பொருந்தும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ள இந்த விலை உயர்விற்கு பிறகு இந்த இரு கார்களின் விலைகள் எவ்வளவு நிர்ணயிக்கப்பட உள்ளன என்பது இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் இந்த ஃபோக்ஸ்வேகன் கார்களை முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை அதிகரிப்பு பொருந்தாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்டைலிஷான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றாக விளங்கும் ஃபோக்ஸ்வேகன் போலோவில், அதேநேரம் ஆற்றல்மிக்க என்ஜின்களும் வழங்கப்படுகின்றன.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

ட்ரெண்ட்லைன், கம்ஃபர்ட்லைன், ஹைலைன் ப்ளஸ் மற்றும் ஜிடி என்ற நான்கு விதமான ட்ரிம் நிலைகளில் இந்த ஹேட்ச்பேக் கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதில் கம்ஃபர்ட்லைனில் மட்டுமே இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

இந்த விலை திருத்தத்திற்கு முன்பு வரையில் ஃபோக்ஸ்வேகன் போலோ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.16 லட்சத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் வரையில் இருந்தன. போலோவில் 1.0 லிட்டர், எம்பிஐ நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு என்ற இரு பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் என்ஜினானது அதிகப்பட்சமாக 74 பிஎச்பி மற்றும் 95 என்எம் டார்க் திறனையும், டர்போசார்ஜ்டு என்ஜின் 109 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன. நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் டர்போசார்ஜ்டு என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் பெறலாம்.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

உட்புறத்தில் இந்த ஹேட்ச்பேக் கார் ஆப்பிள் கார்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 6.5 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், பின்பக்க பயணிகளுக்கும் ஏசி துளைகள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் உள்ளிட்டவற்றை பெறுகிறது.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்பக்க இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படுகின்றன. மறுப்பக்கம் வெண்டோ செடான் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.13.68 லட்சம் வரையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தன.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு இந்த ஃபோக்ஸ்வேகன் செடான் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 லட்சத்தை கடக்கவுள்ளது. இது கம்ஃபர்ட்லைன், ஹைலைன் மற்றும் ஹைலைன் ப்ளஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்த செடான் காரை பொறுத்தவரையில், என்ஜின் தேர்வுகளின் எண்ணிக்கையும் குறைவாகும்.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

போலோவில் வழங்கப்படும் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வெண்டோ கிடைக்கிறது. மேலும், என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளிலும், டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் கூட எந்த மாற்றமும் இல்லை. போலோவில் வழங்கப்படும் பெரும்பான்மையான பாகங்களையே இந்த நடுத்தர-அளவு செடான் மாடலும் பெறுகிறது.

மலிவான ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன!! செடானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சத்தை கடந்தது

இருப்பினும் கூடுதலாக தன்னிச்சையாக டிம்-ஆக கூடிய IRVM, ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்களுடன் கேமிரா மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் வெண்டோவில் வழங்கப்படுகின்றன. இதிலிலும் பாதுகாப்பிற்கு முன்பக்க இரட்டை காற்றுப்பைகள், இபிடியிடன் ஏபிஎஸ் உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன.

Most Read Articles
English summary
Volkswagen India announces price hike on Polo and Vento models.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X