செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

Volkswagen India நிறுவனம் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி அதன் புதிய Taigun SUV மாடலை அறிமுகம் செய்து, மேலும் அதே தினத்தில் காரின் விலையினையும் அறிவிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

Volkswagen நிறுவனம் Taigun நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் பணிகளை தொழிற்சாலையில் துவங்கி இருப்பதாக கடந்த வாரத்தில் அறிவித்தது. இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவும், இணையம் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

Volswagen-Skoda கூட்டணியின் இந்தியா 2.0 திட்டத்தில் வெளிவரும் முதல் Volkswagen காராக Taigun விளங்கவுள்ளது. Skoda பிராண்டில் இருந்து ஏற்கனவே முதல் மாடலாக Kushaq எஸ்யூவி கடந்த ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. Kushaq 1.5லி காரின் டெலிவிரி பணிகள் சமீபத்தில் தான் துவங்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

இந்திய வாடிக்கையாளர்களுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட MQB A0 IN கட்டமைப்பில் உருவாக்கப்படும் Taigun காருக்கு விற்பனையில் போட்டியளிக்கும் வகையில் Hyundai Creta, Kia Seltos, Tata Harrier, MG Hector, Nissan Kicks உள்ளிட்டவை உள்ளன. எனவே இவற்றிற்கு சரியான போட்டியளிக்கும் விதத்திலான விலையே Taigun-னிற்கு நிர்ணயிக்கப்படும்.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

ஒரே கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், Skoda Kushaq-இல் வழங்கப்படும் சில பாகங்கள் அப்படியே Volkswagen Taigun-னிற்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வளவு ஏன், என்ஜின் தேர்வுகளை கூட இரண்டும் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த வகையில் Taigun SUV-இல் இரு டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

இதில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு TSI பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 எச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு எவோ பெட்ரோல் என்ஜின் 150 எச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல்; டிரான்ஸ்மிஷன் நிலையான தேர்வாக வழங்கப்பட உள்ளன. அதேநேரம் கூடுதல் டிரான்ஸ்மிஷன் தேர்வாக சிறிய அளவு டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், 1.5 லி என்ஜின் உடன் 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கொடுக்கப்பட உள்ளன.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

புதிய Volkswagen Taigun காரின் முன்பக்கத்தில் ஒற்றை-துண்டாக ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், க்ரில் பகுதியில் இரட்டை க்ரோம் ஸ்லாட்கள் மற்றும் க்ரில்லின் அடிப்பகுதியில் க்ரோம் அலங்கரிப்பும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பின்பக்க பம்பரிலும், முழு-அகல டெயில்லேம்ப்பில் கூட க்ரோம்-ஐ பார்க்க முடிகிறது.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

காரின் பக்கவாட்டு பகுதி மிகவும் நேர்த்தியான ஸ்டைலில், எளிமையானதாக, ஸ்போர்டியான அலாய் சக்கரங்களை பெற்றுவரவுள்ளது. உட்புறத்தில் தொழிற்நுட்ப அம்சங்கள் மிகுந்த மாடலாக Taigun வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ரீமியம் தரத்திலான டேஸ்போர்டு மற்றும் மைய கன்சோல் பகுதியினை இந்த Volkswagen எஸ்யூவி கார் ஏற்று வரவுள்ளது.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

அத்துடன் இதன் கேபினில் My Volkswagen இணைப்பு தொழிற்நுட்பத்தையும் எதிர்பார்க்கிறோம். இதனுடன் தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல், வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி, பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், க்ரூஸ் கண்ட்ரோல், என்ஜினை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்வதற்கு அழுத்து பொத்தான் போன்றவையும் இதன் கேபினில் வழங்கப்பட உள்ளன.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

பாதுகாப்பு அம்சங்களாக 6 காற்றுப்பைகள், electronic stability control நிச்சயமாக வழங்கப்படும். இவை தவிர, ஏகப்பட்ட பாதுகாப்பு, சவுகரியம் மற்றும் இணைப்பு வசதிகளையும் Taigun-இல் எதிர்பார்க்கிறோம். Volswagen Taigun முதன்முதலாக கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

ஸ்டாண்டர்ட் Taigun உடன் Taigun GT காரையும் விற்பனைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தோற்றத்தில் இரண்டிற்கும் இடையே பெரிய அளவில் எந்தவொரு வித்தியாசமும் இருக்காது என்றாலும், நிச்சயம் சில அம்சங்கள் இரண்டையும் வித்தியாசப்படுத்தும் வகையில் வழங்கப்படும்.

செப்டம்பர் இறுதியில் அறிமுகம் Volkswagen Taigun!! விலையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

ஸ்டாண்டர்ட் Taigun காரின் ஆரம்ப விலை ரூ.10 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேசமயம் டாப் வேரியண்ட்டின் விலை ரூ.17 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம். இந்த எஸ்யூவி காருக்கு ஐந்து விதமான நிறத்தேர்வுகளை வழங்க Volkswagen முடிவெடுத்துள்ளது.

Most Read Articles

English summary
Volkswagen India will officially announce prices of Taigun Mid-size SUV on September 23.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X