ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மிகவும் உயரிய வகை செடான் கார் மாடலான அர்டியோன் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல புதிய கார் மாடல்களை களமிறக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எஸ்யூவி மாடல்களையே அதிகம் களமிறக்கும் முடிவில் இருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

அதேநேரத்தில், பிற ரக கார்களை களமிறக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், வென்ட்டோ காருக்கு மாற்றாக புதிய விர்டுஸ் செடான் காரை கொண்டு வரும் திட்டத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதைதொடர்ந்து, தற்போது சொகுசு செடான் கார் மாடலையும் இந்தியாவில் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விலை உயர்ந்த சொகுசு செடான் கார் மாடலான அர்டியோன் கார்தான் இந்தியாவில் கொண்டு வரப்பட உள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஆசிஷ் குப்தா," அர்டியோன் காரை இந்தியா கொண்டு வரும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதனால், ரூ.45 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய அர்டியோன் செடான் காரில் எல்இடி விளக்கு கம்பி அமைப்புடன் கூடிய க்ரில் மைப்பு, வலிமையான பானட், தாழ்வான கூரை அமைப்பு, கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், நான்கு குழல்கள் கொண்ட புகைப்போக்கி அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மிக பிரம்மாண்டமாகவும், கவர்ச்சிகரமாகவும் இந்த செடான் கார் இருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த காரில் சாஃப்ட் பிளாஸ்டிக் டேஷ்போர்டு, பிரிமீயம் அப்ஹோல்ஸ்ட்ரி, 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய 700 வாட் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

அர்டியோன் காரில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 268 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் செடான் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவலை ஆசிஷ் குப்தா பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Most Read Articles

English summary
Volkswagen is planning to launch Arteon luxury sedan car in India.
Story first published: Friday, February 26, 2021, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X