இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார்!

புதிய தலைமுறை போலோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. மேலும், இந்தியாவிற்கான சிறப்பு அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

 இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கார்!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் போலோ காருக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. சிறந்த கட்டமைப்பு, நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

 இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கார்!

இந்த நிலையில், இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், போலோ கார் மீதான வாடிக்கையாளர்கள் கவனம் குறைந்து வருகிறது.

 இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கார்!

இதனை மனதில் வைத்து புதிய தலைமுறை போலோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஃபோக்ஸ்வேகன் பரிசீலித்து வருகிறது. அதாவது, ஆறாம் தலைமுறை மாடலாக வெளியிடப்பட்ட மாடலை இந்தியா கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

 இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கார்!

ஆட்டோகார் இந்தியா தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிர்வாக இயக்குனர் ஆசிஷ் குப்தா, " புதிய போலோ கார் அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

 இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கார்!

சர்வதேச அளவில் வெளியான போலோ கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி பிளாட்ஃபார்மை தழுவி இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையில் புதிய போலோ காரை உருவாக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

 இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கார்!

இதனால், இந்த புதிய போலோ கார் மாடல் இந்தியாவுக்கான சிறப்பு அம்சங்கள் ஏராளமானவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள புதிய போலோ கார் 4 மீட்டருக்கும் கூடுதலான நீளம் கொண்டது.

 இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கார்!

ஆனால், இந்தியாவில் வரிச் சலுகை பெறும் விதத்தில், 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் இந்த கார் உருவாக்கப்படும். அதேபோன்று, பல முக்கிய வசதிகளும் இந்தியர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கொடுக்கப்படும்.

 இந்தியா வருகிறது புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் கார்!

இந்தியாவில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Volkswagen is planning to launch next-gen Polo in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X