அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறதா ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் அசத்தலான ஒரு நவீன தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் என்ற அசத்தலான காம்பேக்ட் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மேட் இன் இந்தியா மாடலாக வருவதால், இந்த எஸ்யூவி பெரும் ஆவலை கிளறியுள்ளது. மேலும், டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் போட்டியாளர்களுக்கு சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

இந்த நிலையில், அண்மையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி பொது பார்வைக்கு வெளியிடப்பட்டது. அப்போது இந்த எஸ்யூவியில் ADAS என்ற அதிநவீன தொழில்நுட்ப வசதி இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

டைகுன் எஸ்யூவியின் இன்டீரியர் படங்களில், ஸ்டீயரிங் வீல் சுவிட்சுகள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் வாகனம் தடம் மாறுவது குறித்த தகவலை வழங்கும் குறியீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த எஸ்யூவியில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் அல்லது லேன் கீப்பிங் அசிஸ்ட் தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

நெடுஞ்சாலையில் செல்லும்போது முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்களை சென்சார்கள் மற்றும் கேமரா மூலமாக கணித்து அதற்கு தக்கவாறு வேகத்தை தானியங்கி முறையில் கூட்டிக் குறைக்கும் வசதியை இந்த அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கும். இதனுடன் சேர்த்து, பிளைன்டு ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட் ஆகியவற்றை இணைத்து ADAS தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

இதுதவிர்த்து, புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

இந்திய வர்த்தகத்திற்காக ஃபோக்ஸ்வேகன் குழுமம் வகுத்துள்ள புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் முதல் மாடலாக டைகுன் எஸ்யூவி வர இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மை தழுவி இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள MQB A0 IN என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

இதனால், இந்த எஸ்யூவியில் 95 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், கருப்பு வண்ண கூரை, சில்வர் வண்ணத்தில் ரூஃப் ரெயில்கள், ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களுடன் கவரும்.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

இந்த எஸ்யூவி ஜிடி என்ற அதிக அலங்கார அம்சங்கள் கொண்ட மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியில் 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் இருக்ககைகள், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும். இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

அப்படியா... 'அந்த' சூப்பரான தொழில்நுட்பத்துடன் வருகிறது ஃபோக்ஸ்வேகன் டைகுன்?

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியானது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Volkswagen is gearing up to launch the Made-in-India Taigun SUV in the country. The company has already unveiled the upcoming compact-SUV offering ahead of its launch. Now a recent report has brought to light that the upcoming Taigun SUV could be offered with (ADAS) Advance Driver Assisted Technology when launched in India.
Story first published: Tuesday, May 4, 2021, 16:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X