Taigun எஸ்யூவிக்கு இந்தியாவில் செம்ம ரெஸ்பான்ஸ்... நடப்பாண்டிற்கான புக்கிங்கையே நிறுத்திய Volkswagen!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் புதுமுக கார் மாடலான டைகுன் (Taigun) எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் நடப்பு 2021ம் ஆண்டிற்கான அனைத்து யூனிட்டுகளும் இப்போதே புக் செய்யப்பட்டுவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இக்காருக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு பற்றிய முக்கிய தகவலையே இந்த பதிவில் காண இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம், செப்டம்பர் 23ம் தேதி அன்று அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டைகுன் (Taigun) எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, உடனடியாக காருக்கான புக்கிங் பணிகளையும் நாட்டில் தொடங்கியது.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

இப்பணிகள் தொடங்கி ஒரு மாதம் மற்றும் சில நாட்கள் மட்டுமே ஆகின்றநிலையில் தற்போது 18 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை டைகுன் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காருக்கு அறிமுகத்திற்கு முன்னதாகவே 12 ஆயிரம் யூனிட்டுகளுக்கான ப்ரீ-புக்கிங்கை பெற்றது குறிப்பிடத்தகுந்தது.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

இது நாள் ஒன்றிற்கு 250 யூனிட்டுகளுக்கான புக்கிங்கை பெறுவதற்கு சமம் ஆகும். இந்த மாதிரியான மாபெரும் வரவேற்பின் காரணத்தினால் நடப்பாண்டிற்கான அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருக்கின்றன. ஆம், 18 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை அடுத்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2021ம் ஆண்டிற்கான டைகுன் எஸ்யூவி-க்கான புக்கிங் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

அதேநேரத்தில், எதிர்பார்த்திராத அளவில் புக்கிங் கிடைத்திருப்பதால் டைகுன் எஸ்யூவிக்கான புக்கிங்கையும் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைகுன் எஸ்யூவி கார் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

கம்ஃபோர்ட்லைன் (Comfortline), ஹைலைன் (Highline), டாப்லைன் (Topline), ஜிடி (GT), மற்றும் ஜிடி ப்ளஸ் (GT Plus) ஆகிய தேர்வுகளிலேயே ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்குக் கிடைக்கிறது. டைகுன் ஓர் ஐந்து இருக்கை வசதிக் கொண்ட கார் ஆகும். இதனை ஸ்கோடா குஷாக் கார்களை தயாரிக்கும் எம்க்யூபி ஏ0 இன் (MQB A0 IN) பிளாட்பாரத்தை பயன்படுத்தி கட்டமைத்திருக்கின்றது.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

ஆகையால், ஸ்கோடா குஷாக் காட்சியளிக்கும் பல அம்சங்கள் டைகுனில் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் ஏராளமான சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் வழங்கப்பட்டுள்ளன.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

இதன் உயர்நிலை வேரியண்ட்களில் ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைப்-சி யுஎஸ்பி போர்ட்கள், பன்முக கன்ட்ரோல் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுமாதிரியான எக்கசக்க சிறப்பம்சங்களே இந்தியர்கள் மத்தியில் ஃபோக்ஸ்வேகன் டைகுனுக்கு அதீத வரவேற்பைப் பெற காரணமாக இருக்கின்றது.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், 1.0 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

இதன் 1.5 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன் டைகுன் காரில் மூன்று விதமான கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்டு கியர்பாக்ஸ் அம்சமாக 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

செம்ம ரெஸ்பான்ஸ்... இந்த வருஷத்துக்கான புக்கிங்கை நிறுத்திய Volkswagen... Taigun எஸ்யூவியின் 2021-க்கான புக்கிங் ஓவர்!

இத்துடன், 1.0 லிட்டர் எஞ்ஜினில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும், 1.5 லிட்டர் எஞ்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷாக், டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Volkswagen temporarily closes bookings for the taigun here is why
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X