பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா?

பெரிய குடும்பங்களுக்கான அதிக இருக்கைகள் வசதிக் கொண்ட வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்த ஓர் கார் மாடலை ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) வர்த்தகத்தில் இருந்து நீக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 7 இருக்கைகள் வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்து வந்த ஓர் பிரபல கார் மாடலை ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் விற்பனையில் இருந்து நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் டிகுவான் ஆல்ஸ்பேஸ் (Tiguan Allspace) மாடலும் ஒன்று.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

இந்த கார் மாடலையே நிறுவனம் தற்போது இந்தியாவில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது. அதாவது, விற்பனையில் இருந்து நீக்கியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த அதிரடியால் இனி இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகியிருக்கின்றது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஃபோர்டு என்டீயோவர் (Ford Endeavour) மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 (Mahindra Alturas G4) ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருந்த கார் மாடலே ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ். இதன் வெளியேற்றத்தால் மேலே பார்த்த கார் மாடல்களுக்கு போட்டியில்லா நிலை உருவாகியுள்ளது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

அதேநேரத்தில் நிறுவனம் மிக விரைவில் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் டிகுவான் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், மேலே பார்த்த கார் மாடல்களுக்கான போட்டியில்லா நிலை குறைந்த நாட்களுக்கு மட்டுமே என்பது தெரிய வந்திருக்கின்றது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

இப்புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனின் அறிமுகத்தை முன்னிட்டே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் மாடலை விற்பனையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது. வழக்கமான டிகுவான் மாடலைக் காட்டிலும் பெரிய உருவம் கொண்டதாக ஆல்ஸ்பேஸ் காட்சியளிக்கின்றது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

215மிமீ நீளம் மற்ரும் 110 மிமீ நீளம் வீல் பேஸைக் கொண்டிருக்கின்றது. மேலும், இது அதிக (முழு) சிறப்பம்சங்களையும் கொண்ட வேரியண்டாக மட்டுமே விற்பனைக்குக் கிடைத்தது. இதனையும் தற்போது நிறுவனம் தூக்கியிருக்கின்றது. இந்த காரில் சிறப்பு வசதிகளாக ஓட்டுநருக்கான டிஜிட்டல் திரை, கார் இணைப்பு வசதி, பனோரமிகி சன்ரூஃப், 8 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் ஆட்டோ மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), முன்பக்கத்தில் பவர் இருக்கைகள், மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

இத்துடன், பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஏழு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ரிவர்ஸ் கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரில் இடம் பெற்றிருக்கின்றன.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் மாடலில் 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளியற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி (dual clutch automatic) மற்றும் ஃபோக்ஸ்வேகனின் 4 மோஷன் அனைத்து வீல் இயக்கம் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

இதே எஞ்ஜின் செட்-அப்பிலேயே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதுப்பிக்கப்பட்ட டிகுவான் விற்பனைக்கு வர இருக்கின்றது. உலக சந்தையில் ஏற்கனவே இக்கார் விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில் அடுத்த வருடமே விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது.

பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரபல கார் மாடலை இந்தியாவில் இருந்து வெளியேற்றிய Volkswagen... ஏன் தெரியுமா? முழு விபரம்!

புதுப்பிக்கப்பட்ட டிகுவான் கார் மாடல் மட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட கோடியாக் காரையும் நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிகுவான் ஆல்-ஸ்பேஸ் காரில் இடம் பெற்றிருக்கும் அதே எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளே இதிலும் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்ஜின் விஷயத்தைப் போன்று மற்ற அம்சங்கள் இருக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதுப்பிக்கப்பட்ட டிகுவான் காரில் பல்வேறு புதிய கவர்ச்சி சேர்ப்பு விஷயங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் சேர்ப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Volkswagen tiguan allspace discontinued from india here is why
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X