ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு ஒருவழியாக ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் ஃபோக்ஸ்வேகனின் இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதியில் இருந்து துவங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

அதனை தொடர்ந்து டைகுன் எஸ்யூவி காரின் அதிகாரப்பூர்வ எக்ஸ்-ஷோரூம் விலைகளை 2021 செப்டம்பர் முதல் வாரத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

இதற்குமுன் ஊடகம் வாயிலாக வெளியாகி இருந்த விபரங்களில் அதே செப்டம்பர் 3ஆம் வாரத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் அறிமுகம் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகளும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

இந்த ஃபோக்ஸ்வேகன் காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து துவங்கவுள்ளன. ஆனால் அதற்கு முன்னரே சில இடங்களில், ரூ.10,000 என்கிற முன் தொகையுடன் முன்பதிவுகளை டீலர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏற்க துவங்கிவிட்டனர்.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

சமீபத்திய ஸ்கோடா காரான குஷாக் எஸ்யூவிக்கு பயன்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் எம்க்யுபி ஏ0-இந்தியா ப்ளாட்ஃபாரத்தில் தான் ஃபோக்ஸ்வேகன் டைகுனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

2,651மிமீ நீளத்தில் பிரிவிலேயே நீண்ட வீல்பேஸ் கொண்ட காராக வெளிவரும் டைகுனின் நீளம் கிட்டத்தட்ட 4.2 மீட்டராகும். இத்தகைய அளவுகளினால் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் கார்களுடன் நேரடியாக டைகுன் போட்டியிடவுள்ளது.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

இந்த நடுத்தர-அளவு எஸ்யூவி காருடன் புதிய லோகோவையும் அறிமுகப்படுத்தும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அத்துடன் இந்தியாவில் உள்ள தனது டீலர்ஷிப் மையங்களை சீரமைக்கவுள்ளது. இதன்படி அவை டிஜிட்டல்மயமாக்கல் செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் உடனான இணைப்பையும் வலுப்படுத்தப்பட உள்ளன.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

கிட்டத்தட்ட 95 சதவீதம் இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஃபோக்ஸ்வேகன் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகளை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.17 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். என்ஜின் & டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை குஷாக் உடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் பகிர்ந்து கொள்ளவுள்ளது.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

இந்த வகையில் குஷாக்கில் வழங்கப்படும் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகளை ஏற்கவுள்ளது. இவற்றுடன் நிலையாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் 18ல் துவங்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் தயாரிப்பு பணிகள்!! டெலிவிரி செப்டம்பரில்

இதில் முதல் டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனையும், இரண்டாவது என்ஜின் 147 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 1.0 என்ஜினிற்கு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், 1.5 லிட்டர் என்ஜினிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸும் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Volkswagen Taigun Production To Commence On August 18. More Details In Tamil.
Story first published: Tuesday, July 27, 2021, 21:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X