Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

Volkswagen Virtus செடான் காரின் இந்திய வருகையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

Volkswagen பிராண்டில் இருந்து தற்சமயம் செடான் காராக Vento விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு பல வருடங்கள் உருண்டோடிவிட்டன.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

ஆதலால் Vento-வின் இடத்தை தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ற மாடலின் மூலமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் Volkswagen நிறுவனம் உள்ளது. Virtus என்கிற பெயரில் Vento-விற்கு மாற்றாக வரும் இது சமீப காலமாக இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

ஆட்டோகார் இந்தியா செய்திதளம் மூலமாக தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, Volkswagen Virtus அடுத்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். Vento-விற்கு மாற்று செடான் மாடலின் வருகையினை இந்த 2021ஆம் ஆண்டிற்குள்ளாக எதிர்பார்த்தோம்.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இதன் அறிமுகம் தாமதமாகியுள்ளது. 2021 ஏப்ரல், மே மாதங்களில் தீவிரமாக இருந்த கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் ஊரடங்குகள் கொண்டுவரப்பட்டன. இதனால் தொழிற்சாலைகள் & டீலர்ஷிப் ஷோரூம்களை மூட வேண்டிய நிலை ஏற்பட, Virtus காரின் சோதனை பணிகளையும், தயாரிப்பு பணிகளையும் தயாரிப்பு நிறுவனத்தால் மேற்கொள்ள முடியாமல் போனது.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

4,482மிமீ நீளத்தில், 1,751மிமீ அகலத்தில் மற்றும் 1,472மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Volkswagen Virtus கார் Vento-வை காட்டிலும் கிட்டத்தட்ட 100மிமீ நீளமானது, 50மிமீ அகலமானது மற்றும் 5மிமீ உயரமானது. இந்த பிராண்டில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Taigun Crossover எஸ்யூவி காரின் அதே பெரிய அளவிலான MQB A0 IN platform-இல் Virtus காரும் வடிவமைக்கப்படுகிறது.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

தோற்றத்தில் கூர்மையான மற்றும் நேர்த்தியான லைன்களுடன், Vento-வின் பரிணாம வளர்ச்சி காராக Virtus இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் உட்புற கேபினின் தரத்திலும் Virtus மிகவும் மாடர்ன் ஆக இருக்கும் என்பது உறுதி.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

இதன் கேபினில் 10-இன்ச் 'virtual cockpit', ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உடன் 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பின்பக்க பயணிகளுக்கும் ஏசி துளைகள் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

ஒரே விதமான platform-இல் வடிவமைக்கப்படுவதால், Taigun காரில் வழங்கப்பட்டுள்ள 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின்கள் Virtus செடான் காரில் வழங்கப்படலாம். இதில் அளவில் சிறிய (1.0) என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி ஆற்றலையும், அளவில் பெரிய டிஎஸ்ஐ என்ஜின் 148 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

அதேநேரம் 1.0 லிட்டர் என்ஜின் உடன் கூடுதலாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும், 1.5 லிட்டர் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றன. இதில் எந்த டிரான்ஸ்மிஷன் தேர்வாக இருந்தாலும் சரி, Volkswagen நிறுவனத்தின் தரமான தயாரிப்பாக Virtus வெளிவரும் என்பது மட்டும் உறுதி.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

விற்பனையில் உள்ள மற்ற மாடர்ன் செடான் கார்களுடன் ஒப்பிடுகையில், இபிடியுடன் ஏபிஎஸ், காற்றுப்பைகள், ISOFIX குழந்தைக்கான இருக்கை கொக்கி, Electronic stability function, hill hold assist உள்ளிட்டவை பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களாக Volkswagen Virtus காரில் வழங்கப்படும்.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

Volkswagen Virtus செடான் கார் ஏற்கனவே சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளது. எங்களை கேட்டால் இந்திய சந்தைக்கு இந்த செடான் மாடல் எப்போதோ கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் Vento பழமையான காராக மாற எப்போதோ ஆரம்பித்துவிட்டது.

Volkswagen Virtus செடான் காரின் வருகையில் தொடரும் தாமதம்!! அறிமுகம் 2022ல் தானாம்

செடான் கார்கள் விற்பனையில் Volkswagen பிராண்ட் ஓரங்கட்டப்பட துவங்கியுள்ளது. எனவே இது புதிய Virtus செடான் கார் வருவதற்கு ஏற்ற நேரம் தான். இருப்பினும் சில தவிர்க்க முடியாத காரணங்களில் இதன் வருகையில் தாமதம் ஏற்பட்டிருப்பது சிறிது வருத்தமே.

Most Read Articles
English summary
Volkswagen Virtus India Launch Details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X