வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

நீண்ட காலமாக இந்திய சந்தையில் உள்ள வென்ட்டோ காருக்கு மாற்றாக புதிய விர்டுஸ் காரை இந்தியாவில் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சாலை சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. எனினும், போட்டியாளர்களான ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்கள் புதிய தலைமுறை மாடல்களாக வந்துவிட்டன. ஆனால், வென்ட்டோ கார் மிக நீண்ட காலமாக சந்தையில் இருந்து வருவதுடன், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள், டிசைன் அம்சங்கள் இல்லாதது குறையாக இருந்து வருகிறது.

வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில், வென்ட்டோ காருக்கு மாற்றாக புத்தம் புதிய விர்டுஸ் என்ற செடான் காரை இந்தியாவில் களமிறக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

இந்த நிலையில், வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட இந்த காரை இந்தியாவில் கொண்டு வருவதற்கு ஏதுவாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்து வருகிறது ஃபோக்ஸ்வேகன். ஆனால், இடதுபக்க ஸ்டீயரிங் வீல் கொண்ட மாடலாக சோதனை செய்யப்பட்டு வருவது குறித்த ஸ்பை படங்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது.

வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0 என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய விட்ரஸ் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவி கூட இந்த பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டது.

வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

எனினும், MQB-A0 பிளாட்ஃபார்மில் சில முக்கிய மாறுதல்களுடன் கூடிய MQB-A0 IN என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த கார் உருவாக்கப்படும். வலதுபக்க ஸ்டீயரிங் வீல் கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படும்.

வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில் 110 பிஎஸ் பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

எல்இடி ஹெட்லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய விர்டுஸ் கார் எதிர்பார்க்கப்படுகிறது.

வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்!

நடப்பு ஆண்டில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மட்டுமின்றி, மாருதி சியாஸ், டொயோட்டா யாரிஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Volkswagen is testing all new Vitrus sedan car in India and it is expected to replace Vento car.
Story first published: Friday, February 26, 2021, 13:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X