ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுக்கு நேர் போட்டியாக புத்தம் புதிய டைகுன் எஸ்யூவியை விரைவில் களமிறக்க உள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஃபோக்ஸ்வேகன் இப்போது டிஜிட்டல் ரென்டரிங் செய்யப்பட்ட இன்டீரியர் படத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த படம் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் களமிறக்கப்பட உள்ளது. இதனால், இரண்டு ஜாம்பவான் மாடல்களையும் எதிர்த்து நிற்கும் வல்லமை கொண்டதாக இந்த புதிய டைகுன் எஸ்யூவியை கொண்டு வருவதற்காக பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கிறது ஃபோக்ஸ்வேகன்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

இந்த நிலையில், டைகுன் எஸ்யூவியின் இன்டீரியர் எப்படி இருக்கும் என்பதை காண்பதற்கான வாய்ப்பை ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கிறது. இதற்காக, டிஜிட்டல் ரென்டரிங் செய்யப்பட்ட இன்டீரியர் படத்தை வெளியிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

வழக்கம்போல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மிகவும் நேர்த்தியான டிசைன் அம்சங்களுடன் இன்டீரியர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காரில் 10 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டில் பிரதானமாக காட்சி அளிக்கிறது. வயர்லெஸ் தொழில்நுட்ப முறையில் கேபிள் இல்லாமல் ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளும் வசதியை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, வென்டிலேட்டட் வசதி கொண்ட முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், கீ லெஸ் என்ட்ரி, ரியர் ஏசி வென்ட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டைகுன் கான்செப்ட் எஸ்யூவியில் வெளிப்புற வண்ணத்திற்கு தக்கவாறு இன்டீரியரில் அலங்கார அம்சங்களுடன் பேனல்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஆனால், தயாரிப்பு நிலை மாடலில் அது தக்க வைக்கப்படவில்லை.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

கருப்பு வண்ண இன்டீரியர், சாஃப்ட் பிளாஸ்டிக் கொண்ட டேஷ்போர்டு பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உயர்வகை டைகுன் ஜிடி வேரியண்ட்டில் உட்புறத்தில் சிவப்பு வண்ணத் தையல் வேலைப்பாடுகளுடன் ஜிடி பேட்ஜ் உள்ளிட்டவை கூடுதலாக இடம்பெற்றிருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், பின்புறத்தில் லைட் பார் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

இந்த காரில் 17 அங்குல அலாய் வீல்கள், கருப்பு வண்ண கூரை, சில்வர் வண்ண பூச்சுடன் ரூஃப் ரெயில்கள், ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் ஜிடி வேரியண்ட்டில் சிவப்பு வண்ண காலிபர்கள் சக்கரங்களில் பொருத்தப்பட்டு இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பின் இருக்கையில் 3 ஹெட்ரெஸ்ட்டுகள், 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட், ரியர் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியில் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. 1.0 லிட்டர் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ், ரெனோ டஸ்ட்டர், நிஸான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும்.

Most Read Articles
English summary
Volkswagen has revealed the interiors of the Taigun SUV in the Indian market. The interiors of the upcoming SUV have been brought to the light by the brand via rendered images. The Taigun comes packed with a host of features inside and out.
Story first published: Wednesday, April 14, 2021, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X