பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

வால்வோ கார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் சந்தை பக்கம் நகரத் துவங்கி இருக்கிறது. இதற்காக, தனது இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த கார் குறித்த அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

 பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

வால்வோ சி40 ரீசார்ஜ் என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் Compact Modular Architecture (CMA) என்ற கட்டமைப்புக் கொள்கையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக வந்த எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யூவியின் அடிப்படையிலான கூபே ரக எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலமாக, பேட்டரியில் மின்சார திறன் இழப்பு சற்றே குறைவதற்கான வாய்ப்பு கிட்டும்.

 பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

இந்த கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதன்பிறகு உலகின் பிற நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் 4.43 மீட்டர் நீளமும், 2.04 மீட்டர் அகலமும், 1.58 மீட்டர் உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் தாழ்ந்த கூரை அமைப்புடன் கூபே ரக எஸ்யூவி மாடலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த காரில் பின்புற பூட்ரூம் 413 லிட்டர் கொள்திறன் கொண்டதாகவும், முன்புறத்தில் 31 லிட்டர் ஸ்டோரேஜ் இடவசதி கொண்டதாகவும் இருக்கிறது.

 பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே பேட்டரி மற்றும் மின்மோட்டார்கள்தான் இந்த காரிலும் உள்ளது. இந்த காரில் 78kWh பேட்டரி தொகுப்பும், இரண்டு மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 408 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும்.

 பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் 420 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 350 கிமீ தூரம் வரை அதிகபட்சமாக பயணிக்கும் வாய்ப்பை வழங்கலாம்.

 பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

இந்த காரின் பேட்டரியை 150kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சார்ஜ் ஏற்றிவிட முடியும். இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியாக இருக்கும்.

 பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

புதிய வால்வோ சி40 ரீசார்ஜ் மின்சார கார் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது விலை விபரம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo has revealed of it's second fully electric car named as the C40 recharge and it is coupe version of XC40 recharge SUV.
Story first published: Wednesday, March 3, 2021, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X