2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

குறிப்பிட்ட வால்வோ கார்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

வால்வோவின் இந்த விலை அதிகரிப்பில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்60 செடான் காரை தவிர்த்து இந்தியாவில் விற்பனையில் உள்ள மற்ற கார்கள் அனைத்தின் விலைகளும் ரூ.2,00,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

கடந்த மூன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வந்த இந்த விலை அதிகரிப்பு 2018ஆம் ஆண்டிற்கு பிறகு வால்வோ முதல்முறையாக கொண்டுவரும் விலை உயர்வாகும். இந்த விலை உயர்விற்கு பிறகு வால்வோவின் மலிவான இந்திய காராக இருக்கும் எக்ஸ்சி40 மாடலின் விலை ரூ.41.25 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

அதிகப்பட்சமாக எக்ஸ்சி90 ரீசார்ஜ் ப்ளக்-இன் ஹைப்ரீட் காரின் விலை ரூ.96.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வால்வோ இந்தியாவில் விற்பனை செய்யும் ஒரே ஒரு எஸ்யூவி காரான எக்ஸ்சி60-இன் புதிய விலை ரூ.60.90 லட்சமாகும்.

2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

வால்வோ பிராண்டில் இருந்து எஸ்60, எஸ்90 என்ற இரு விதமான செடான் கார்கள் நம் நாட்டு சந்தையில் விற்பனையில் உள்ளன. இதில் சமீபத்திய அறிமுகமான எஸ்60 செடானின் விலை ரூ.45.90 லட்சமாகவும், சற்று ப்ரீமியமான எஸ்90 காரின் விலை ரூ.60.90 லட்சமாகவும் உள்ளன.

2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

விலைகள் அதிகரிக்கப்படும் அதேநேரத்தில், வால்வோவின் லக்சரி செடான் காரான எஸ்90 இன் பெயர் நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்90 மாடலின் விற்பனை இந்தியாவில் கூடிய விரைவில் நிறுத்தப்படலாம்.

2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

இதற்கான காரணம் தெரியவில்லை, எஸ்90 மீண்டும் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் கொண்டுவரப்படலாம். சீன வாகன உற்பத்தி நிறுவனமான ஜீலி ஆட்டோமொபைல் ஃபோர்டில் இருந்து நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து வால்வோ வெற்றியை ருசித்து வருகிறது.

2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

இந்தியாவில் தான் ஆரம்பத்தில் இருந்தே வால்வோ கார்களின் விற்பனை மிக சிறப்பானதாக இல்லை. புதிய விலை அதிகரிப்பு வால்வோவின் விற்பனையை இந்தியாவில் மேலும் கீழ்நோக்கி தள்ளும்.

2018க்கு பிறகு வால்வோ கார்களின் விலைகள் அதிகரிப்பு!! மலிவான வால்வோ கார் தற்போதைக்கு எது தெரியுமா?

ஆனால் அதேநேரம் ப்ளக்-இன் ஹைப்ரீட் கார்கள் வால்வோவின் வணிகத்தை சிறப்பானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்காக வால்வோ நிச்சயம் சில திட்டங்களை கையில் வைத்திருக்கும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo India Price Hike: Volvo XC40, XC60, XC90 Prices Hiked By Upto Rs 2 Lakh.
Story first published: Thursday, May 6, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X