விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

கார்களை தயாரிப்பது என்பது ஒரு பொறியியல் கலையாகும். மக்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு நகர்த்தும் இயந்திரங்களான கார்களை ஒரு சில பொறியியலாளர்கள் மிகவும் ஈடுப்பாட்டாக இரசனை உடன் வடிவமைப்பர். இது பல முறை வாடிக்கையாளர்களின் இரசனை உடன் க்ளிக் ஆகிவிடும்.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

ஆனால் சில சமயங்களில் ஒத்து கொள்ளாமலும் போகலாம். அந்த மாதிரியான சமயங்களில் வடிவமைத்த பொறியியலாளர்களின் உழைப்பு வீணாக போகிறது. அவ்வாறு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்திய சந்தையில் தோல்வியை கண்ட 6 கார்கள் பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

ஹோண்டா பிஆர்-வி

ஜப்பானிய ஹோண்டா கார்ஸ் இந்திய சந்தையில் சிட்டி, சிவிக் மாடல்களின் மூலம் செடான் பிரிவில் ஓரளவிற்கு விற்பனையை பார்த்ததே தவிர்த்து, மற்ற பிரிவுகளில் மற்ற நிறுவனங்களுக்கு பெரிய அளவில் போட்டியாக விளங்கியது இல்லை. அவ்வாறு ஹோண்டா பிராண்டில் இருந்து விற்பனைக்கு வந்து இந்தியர்களால் கண்டு கொள்ளப்படாத எஸ்யூவி கார் தான் பிஆர்-வி ஆகும்.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

முன்பு விற்பனையில் இருந்து ஹோண்டா மொபைலியோவின் பருமனான வெர்சனான இது தற்போது விற்பனையில் இல்லை. மொபைலியோவும் நம் நாட்டில் அதிகளவில் விற்பனையானது இல்லை. ஆனால் உண்மையில் பிஆர்-வி அருமையான காராகவே விளங்கியதை மறுக்க முடியாது.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

டாடா ஹெக்ஸா

ஹோண்டா பிஆர்-வி காரை போல் இந்தியாவில் தோல்வியை கண்டு, நிறுத்திக்கொள்ளப்பட்ட மற்றொரு மாடல் டாடா ஹெக்ஸா. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காரும் தோல்வியை காணும் என்பதற்கு மற்றொரு உதாரணம். டாடா கார்கள் பொதுவாகவே பாதுகாப்பானவை என்பது வழக்கத்தில் உள்ள கருத்து.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

இந்த வகையில் ஹெக்ஸாவும் தரமான காராகவே இருந்தது. பல கேரக்டர்களை கொண்ட எம்பிவி காராக கொண்டுவரப்பட்ட டாடா ஹெக்ஸா மட்டுமே அதன் அறிமுகத்தின்போது 4X4 ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட ஒரே ஒரு எம்பிவி காராக விளங்கியது.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

டொயோட்டா யாரிஸ் (ரூ.9.17 - 14.67 லட்சம்)

டொயோட்டா நிறுவனத்தின் செடான் கார். ஜப்பானிய ஹோண்டா நிறுவனம் செடான் கார்களின் மூலம் தான் ஓரளவிற்கு விற்பனையை பார்த்து வருவதாக முன்பு கூறினோம் அல்லவா. இதனால் இந்த மற்றொரு முன்னணி ஜப்பானிய கார் பிராண்டின் செடான் காரின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகியது.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

ஆனால் ஹோண்டா சிட்டி இன்னமும் நல்லப்படியாக விற்பனையாகி கொண்டிருக்க, எஸ்யூவி கார்களின் எழுச்சியால் இந்த டொயோட்டா செடான் காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுவது இன்றையோ அல்லது நாளையோ என்கிற நிலைமையில் உள்ளது. இந்தியாவில் தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் உண்மையான டொயோட்டா டிஎன்ஏ கொண்ட மிகவும் சில கார்களுள் யாரிஸும் ஒன்றாகும்.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

நிஸான் கிக்ஸ் (ரூ.9.50 - 14.64 லட்சம்)

யாரிஸ் செடான் காரை போன்று, வலுக்கட்டாயமாக இந்தியாவில் விற்பனையில் வைக்கப்பட்டிருக்கும் மாடல் தான் நிஸான் கிக்ஸ் ஆகும். நிஸான் நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் நிலையான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறது.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

இதுவும் இந்தியர்களால் கண்டுக்கொள்ளப்படாத மற்றொரு தரமான ஜப்பானிய காரே. கம்பீரமான எஸ்யூவி உடலமைப்பில் விற்பனை செய்யப்பட்டு வரும் 2020 நிஸான் கிக்ஸில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ் (ரூ.8.39 - ரூ.12.39 லட்சம்)

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுஸுகி. அதாவது மாதத்திற்கு மாதம் மற்ற அனைத்து நிறுவனங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். ஆனால் இந்த நிறுவனத்தின் விலைமிக்க எஸ்யூவி காரான எஸ்-க்ராஸிற்கு மட்டும் வாடிக்கையாளர்கள் கிடைப்பதில்லை.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

கடந்த சில மாத விற்பனை நிலவரங்களை எடுத்து பார்த்தோமேயானால், இவ்வாறு தான் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி எஸ்-க்ராஸில் அறிமுகத்தின் போது 1.6 லிட்டர் டீசல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ற இரு டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒரே 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் மட்டுமே 5-ஸ்பீடு மேனுவல் & 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

மஹிந்திரா கேயூவி100 (ரூ.6.10 - 7.76 லட்சம்)

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு சந்தை வளர்ந்து வருகிறது. ஆனால் மைக்ரோ-எஸ்யூவி கார்களுக்கு பெரியதாக இல்லை. ஆனால் மைக்ரோ-எஸ்யூவி கார்களும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன என்பது போல் ஓர் மாய பிம்பம் உள்ளது. இதில் மாருதி சுஸுகி உள்பட பல முன்னணி நிறுவனங்கள் சிக்கியுள்ளன.

விற்பனையில் தோல்வியடைந்த முன்னணி நிறுவனங்களின் கார்கள்!! நிஸான் கிக்ஸ் முதல் மாருதி எஸ்-க்ராஸ் வரையில்

இந்த வகையில் மஹிந்திரா அறிமுகம் செய்த மைக்ரோ-எஸ்யூவி மாடல் கேயூவி100 ஆகும். தற்சமயம் விற்பனையில் இருக்கும் மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காரை 1.2 லிட்டர் ஃபால்கன் ஜி80 பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம். டீசல் என்ஜினை தேர்வை பிஎஸ்6 அப்கிரேடின் போது மஹிந்திரா நிறுத்தி கொண்டது.

Most Read Articles
English summary
8 Cars That Did Not Do Well
Story first published: Friday, September 24, 2021, 2:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X