டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

2021 டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. செயல்திறன், தொழில்நுட்பம், சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் கலவையாக டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

முழுமையாக பரிசோதிக்கப்பட்ட தயாரிப்பு!

வழக்கமான ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. ஆனால் டாடா நிறுவனம் தொடர்ச்சியாக தனது ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி ஏற்கனவே விற்பனையில் உள்ள டிகோர் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

நெக்ஸான் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார் இதுதான். அடுத்ததாக அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை டாடா நிறுவனம் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்துகிறது. பல்வேறு கால நிலைகளிலும், பல்வேறு வகையான நிலப்பரப்புகளிலும் இந்த கார்கள் சோதனை செய்யப்படுகின்றன. எனவே டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட ஒரு தயாரிப்பு என்ற சிறப்பம்சத்தை பெறுகிறது.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

யார் வேண்டுமானாலும் வாங்கலாம்!

பழைய டிகோர் எலெக்ட்ரிக் கார் அரசு மற்றும் ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் டிகோர் எலெக்ட்ரிக் காரின் இந்த புதிய வெர்ஷன், முழுக்க முழுக்க தனியார் பயன்பாட்டை குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ளது. அதாவது டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை யார் வேண்டுமானாலும் வாங்க முடியும்.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

தனியார் பயன்பாட்டை குறிவைத்து களமிறக்கியுள்ளதால், அதற்கு ஏற்ற வகையிலான மேம்பாடுகளை புதிய டிகோர் எலெக்ட்ரிக் காரில் டாடா நிறுவனம் செய்துள்ளது. அதாவது டிசைன், சௌகரியம், வசதிகள், ரேஞ்ச் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும், தனியார் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

பேட்டரியை சார்ஜ் செய்வது ஈஸி!

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 26 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை மொத்தம் 2 வழிகளில் சார்ஜ் செய்ய முடியும். 15A சார்ஜர் பயன்படுத்தினால், பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கு சுமார் 8.5 மணி நேரம் வரை ஆகும். அதே நேரத்தில் 25A ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 1 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம்.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையும் இந்திய வாடிக்கையாளர்களை டிகோர் எலெக்ட்ரிக் காரின் பக்கம் ஈர்க்க கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

சூப்பரான ரேஞ்ச்!

எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு பலரும் தயங்குவதற்கு காரணமே ரேஞ்ச் பற்றிய கவலைதான். அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்? என்பதுதான் ரேஞ்ச். டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை வாங்குபவர்களுக்கு ரேஞ்ச் பற்றிய கவலையே இருக்காது.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

ஏனெனில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 306 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பால் சான்று வழங்கப்பட்ட ரேஞ்ச் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் ரேஞ்ச் சற்று குறையலாம் என்றாலும், இது சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகமில்லை.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

வசதிகள், தொழில்நுட்பத்திலும் சூப்பர்!

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் ஜிப்ட்ரான் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் செயல்திறன் மற்றும் ரேஞ்ச் மெருகேற்றப்பட்டுள்ளது. அதே சமயம் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் உடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

மேலும் ஆட்டோமேட்டிக் ஏசி, கூல்டு க்ளவ் பாக்ஸ், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய வசதிகளையும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. வசதிகளை பொறுத்தவரை இந்த காரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை குறிப்பிடலாம். இதன் மூலம் 30க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

பாதுகாப்பில் வேற லெவல்!

பாதுகாப்பை பொறுத்தவரை, முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. மேலும் க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம்.

டாடா செய்த தரமான சம்பவம்! இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் பயணிகள் வாகனம் என்ற பெருமையை டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 11.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. எனவே அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் மிக சிறப்பான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் திகழ்கிறது.

Most Read Articles
English summary
Why you should buy tata tigor ev important reasons
Story first published: Saturday, October 9, 2021, 15:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X