மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

லம்போர்கினி மியுரா எஸ்வி காரின் தயாரிப்பு பணிகள் துவங்கி 50 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்த ஸ்டைலிஷ் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

பி400 செயல் திட்டத்தின் கடைசி பரிணாம வளர்ச்சியாக வடிவமைக்கப்பட்ட மியுரா எஸ்வி காரை முதல்முறையாக 1971 மார்ச்சில் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் லம்போர்கினி நிறுவனம் காட்சிப்படுத்தியது.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

மியுரா எஸ்வி காரின் பெயரில் உள்ள எஸ்.வி என்பது சூப்பர் வெலோஸ் (சூப்பர் ஃபாஸ்ட்) என்பதை குறிக்கிறது. வாடிக்கையாளர்கள் அதிகளவில் தேர்வு செய்த லம்போர்கினி கார்களுள் ஒன்று மியுரா எஸ்வி.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

மியுரா மற்றும் மியுரா எஸ் கார்களுக்கு கிடைத்த வரவேற்பை வைத்தே மியுரா எஸ்வி நிச்சயம் மிக பெரிய வெற்றி மாடலாக இருக்கும் என்று அப்போதே கணித்துவிட்டனர். மியுரா மற்றும் மியுரா எஸ் கார்கள் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தயாரிப்பில் இருந்தன.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

தோற்றத்திலும் சரி, தொழிற்நுட்பங்களிலும் சரி மற்ற மியுரா (பி400 & பி400 எஸ்) கார்கள் உடன் ஒப்பிடுகையில் மியுரா எஸ்வி வேறுப்பட்ட காராகும். இதில் பொருத்தப்பட்ட 4-லிட்டர் 12-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 385எச்பி மற்றும் 40.7 கிலோகிராம்-மீட்டர் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

விரைப்பான சேசிஸை கொண்டிருந்த இந்த லம்போர்கினி கார் திருத்தியமைக்கப்பட்ட பின்பக்க சஸ்பென்ஷனை பெற்றிருந்தது. அதேபோல் எதிரெதிர் சக்கரங்களுக்கு இடைப்பட்ட தூரமும் மற்ற மியுரா கார்களை காட்டிலும் 130மிமீ அதிகமாகும்.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

மியுரா எஸ்வி காரின் முன் மற்றும் பின் சக்கரங்களில் வெவ்வேறான அளவுகளை கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டன. மேலும், திருத்தியமைக்கப்பட்ட டிசைனில் இந்த காரின் ரிம்களை வாடிக்கையாளர்கள் கோல்டு நிறத்தில் பெறவே விரும்பினர்.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

பின் சக்கரங்களில் 255-பிரிவு டயர்கள் பொருத்தப்பட்டன. இந்த இயந்திர பாகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப மியுரா எஸ்வி காரின் தோற்றமும் மற்ற மியுரா கார்களை போல் இல்லாமல் சற்று மாற்றப்பட்டது.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

இந்த காரின் பின்பக்கம் சற்று கூடுதல் அகலத்துடன் இருக்கும். மியுரா எஸ்வி காருக்கு இருக்கும் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. அதேபோல் இந்த காரில் வித்தியாசமான பின்பக்க ஹெட்லைட்கள் மற்றும் புதிய காற்று ஏற்பான் உடன் முன்பக்க பம்பர் வழங்கப்பட்டன.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

அதிகப்பட்சமாக மணிக்கு 290கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த லம்போரிகினி ஸ்போர்ட்ஸ் கார் 1 கிமீ தூரத்தை வெறும் 24 வினாடிகளில் எட்டியது. இது அந்த சமயத்தில் மிக பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

மறக்க முடியாத லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்... மியுரா எஸ்வி!! அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவு!

1973ல் 150 யூனிட்கள் தயாரிக்கப்பட்ட பிறகு மியுரா எஸ்வி கார்களின் விற்பனையை லம்போர்கினி நிறுவனம் நிறுத்தி கொண்டது. இருப்பினும் 1975ல் ஒரே லம்போர்கினி மியுரா எஸ்வி கார் வால்டர் வூல்ஃபிற்காக தயாரிக்கப்பட்டது.

Most Read Articles
English summary
Lamborghini Miura SV turns 50, Highest expression of the ‘supercar’ concept of its time.
Story first published: Monday, April 19, 2021, 1:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X