உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல..

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

உலகிலேயே எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகின்றன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டொயோட்டா நிறுவனமே உலகளவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனைச் செய்வது தெரிய வந்துள்ளது.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

கடந்த 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 9.538 மில்லியன் வாகனங்களை இந்நிறுவனம் விற்பனைச் செய்துள்ளது. இது உலகளவில் விற்பனைச் செய்த வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்த எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனைச் செய்த போதிலும் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனைச் செய்து முதல் இடத்தைப் பிடித்து வந்தது. ஆனால், இம்முறை ஜப்பான் நிறுவனம், ஜெர்மன் நாட்டு நிறுவனமான ஃபோக்ஸ்வேகனை வீழ்த்தியுள்ளது. 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டின் விற்பனை 11.3 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

டொயோட்டாவைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தை ஃபோக்ஸ்வேகன் பிடித்திருக்கின்றது. இந்நிறுவனம், 9.302 மில்லியன் வாகனங்களை விற்பனைச் செய்து இந்த இடத்தைப் பிடித்துள்ளது. இதுவும் உலகளவில் விற்பனைச் செய்த வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். இந்த விற்பனை எண்ணிக்கையானது கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலும் 15.2 சதவீதம் சரிவாகும்.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

கடந்த ஆண்டில் டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும் விற்பனை வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. உலகின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி நிறுவனங்களுமே மிகக் கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தன. இம்மாதிரியான சூழ்நிலையிலும் டொயொட்டா நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்திருப்பு ஒட்டுமொத்த உலக வாகன சந்தைக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

டொயோட்டாவின் இந்த உயர்விற்கு நிறுவனத்தின் துணை நிறுவனங்களான லெக்சஸ், ஹைனோ, ரேன்ஸ் மற்றும் டைஹட்சு ஆகியவையும் பெரும் பங்களிப்பை அளித்திருக்கின்றன. என்னதான் டொயோட்டா நிறுவனம் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும் டெஸ்லா நிறுவனத்தின் வாகனங்களே உலகின் மிகவும் அதிக மதிப்புமிக்க வாகனங்கள் என்ற பெருமையைச் சூடியிருக்கின்றன.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

கடந்த ஆண்டில் இந்த பட்டத்தை டொயோட்டா நிறுவனம் சூடியிருந்தது. இதனையே டெஸ்லா மின்சார கார்கள் டொயோட்டாவிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கின்றன. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. கடந்த இரு ஆண்டுகளில்தான் இத்தகைய அதீத வளர்ச்சியை டெஸ்லா பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

தற்போது கிடைத்திருக்கும் சிறப்பான வரவேற்பை இனி வரும் காலங்களிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் டொயோட்டா மிக அதிக கவனத்துடன் இருக்கின்றது. இதற்கான முயற்சிகளில் நிறுவனம் ஏற்கனவே ஈடுபடத் தொடங்கிவிட்டது.

உலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா?.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல...

அதாவது, ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் கார்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்க இருப்பதாக டொயோட்டா முன்பே அறிவித்துவிட்டது. உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன இயக்கத்தை நோக்கி நகர ஆரம்பித்திருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சியில் டொயோட்டா களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
World’s Largest Carmaker In 2020: Here Is Who?.. Read In Tamil.
Story first published: Saturday, January 30, 2021, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X