ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது..! இப்படி மாறியிருக்கு..! தரமான மாற்றம்!

அனைவருக்கும் கார் என்ற எண்ணத்தின்கீழ் கொண்டு வரப்பட்ட டாடா நானோ காரை இளைஞர்கள் சிலர் ராஜா காலத்து (விண்டேஜ் ரக) காராக உருமாற்றியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

ஏழைகளுக்கும் கார் என்ற கருத்தின் அடிப்படையில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே டாடா நானோ கார். லட்ச ரூபாய் என்ற மிக மிக மலிவான விலையில் இது நாட்டில் விற்பனைக்கு வந்தது. இத்தகைய விலையைால் உலகிலேயே மலிவு விலைக் கொண்ட காராகவும் இது காட்சியளித்து. ஆனால், இது பல்வேறு காரணங்களால் சந்தையை விட்டு வெளியேறியது.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

இத்தகைய ஓர் காரையே இளைஞர் ஒருவர் தற்போது விலை மதிப்பற்ற விண்டேஜ் காராக மாற்றியமைத்திருக்கின்றார். ஆமாங்க, டாடா நானோ கார் தற்போது விற்பனையில் இல்லை என்றாலும் முன்னதாக வாங்கப்பட்ட நபர்களால் தற்போது கம்பீரமாக இக்கார் சாலைகளில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

அந்தவகையில் உருமாற்றத்துடன் வலம் வந்துக் கொண்டிருக்கும் டாடா நானோ கார் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். விண்டேஜ் காராக மாறியிருக்கும் டாடா நானோ பற்றிய வீடியோவை தி கராஜ் லைஃப் மோட்டார் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

டாடா நானோ எப்படி உருமாற்றம் செய்யப்பட்டது என்பது பற்றிய வீடியோவை அது வெளியிடவில்லை. ஆனால், என்ன மாதிரியான மாற்றங்களை எல்லாம் அக்கார் பெற்றிருக்கின்றது என்பது பற்றிய பதிவை அது வெளியிட்டிருக்கின்றது. இது டாடா நானோ தானா என்று கேட்குமளவிற்கு முழுமையாக அதன் மாற்றப்பட்டிருக்கின்றது.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

ஸ்டியரிங் வீல், வேகத்தை குறிக்கும் மீட்டர் மற்றும் பிற அம்சங்களைக் கொண்டே இது நானோ கார்தான் என்பதை நம்மால் கண்டறிய முடிகின்றது. ஏனெனில், நானோவின் வீல் முதல் கொண்டு வெளிப்புறத் தோற்றத்தின் அனைத்து பாகங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. எஞ்ஜின் மற்றும் சேஸிஸ் போன்ற சில முக்கியமான பாகங்கள் மட்டுமே அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

சேஸிஸிலும் புதிய தோற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. டாடா நானோ ஓர் மிக சிறிய ரக வாகனமாகும். ஆனால், தற்போது உருமாற்றத்தைப் பெற்றிருக்கும் இந்த வாகனம் சற்றே அதிக நீளம் கொண்டதாக காட்சியளிக்கின்றது. ஆகையால், இதன் சேஸிஸ் பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

இது மாதிரியான மாற்றங்களால், முற்றிலும் ரெட்ரோ ரக வாகனமாக நானோ மாறியுள்ளது. நிச்சயம் இந்த கார் சாலையில் செல்லுமானால் "ராஜா காலத்து காரோ" இது என பார்வையாளர்களை நினைக்க வைக்கும். அந்தளவிற்கு மிகவும் கச்சிதமாக இதனை இளைஞர்கள் மாற்றியமைத்திருக்கின்றனர்.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

ஆனால், காரை மாற்றியமைத்த இளைஞர்கள் பற்றிய எந்த விபரத்தையும் யுட்யூப் சேனல் வெளியிடவில்லை. சில காரணங்களுக்காக இது மறைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. இந்தியாவில் இதுபோன்று ஓர் வாகனத்தின் உருவத்தை மழுங்க செய்யும் வகையில் மாற்றுவது குற்ற செயலாகும்.இதுமாதிரியான செயல்களை செய்தவர்கள் பலர் அதற்குரிய தண்டனையைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கண்களைக் கவரும் தோற்றத்தில் நானோ மாற்றப்பட்டிருக்கின்றது.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

இதன் கிளாசியான தோற்றத்திற்காக பண்டைய கால கார்களைப் போன்ற பேனல்கள், ஹெட்லைட்டுகள், டர்ன் இன்டிகேட்டர்கள், விண்ட் ஷீல்டு மற்றும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரு ஹெட்லைட் வீல் ஃபெண்டரிலும், இரு ஹெட்லைட் முன் பக்க பம்பரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் ஹாரன்களும் இதே முன் பக்க பம்பரிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில் டாடா நானோ பின் பக்க எஞ்ஜின் கொண்ட வாகனமாகும். மேலும், இது ஓர் பின் வீல் இயக்கம் கொண்ட வாகனமும் கூட. இப்போது விண்டேஜ் உருவத்தைப் பெற்றிருக்கும் இந்த காரில் எஞ்ஜின் இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

டாடா நானோ காரில் 624 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய 4-ஸ்ட்ரோக், வாட்டர் கூல்டு, இரட்டை சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 33 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 45 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

ராஜா காலத்து காராக மாறிய டாடா நானோ! அட ஒரு லட்ச ரூபா காரா இது... இப்படி மாறியிருக்கு... இப்ப இதோட மதிப்பு கூடிடுச்சு!

இந்த எஞ்ஜினுடன் 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு ரூ. 1 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்த இந்த கார் இறுதியாக இந்தியாவை விட்டு வெளியேறும்போது ரூ. 2.97 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

குறிப்பு: உருமாற்றத்தை ஒப்பிடுவதற்காக வழக்கமான டாடா நானோ கார்களின் படங்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youngsters converted tata nano into a vintage car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X