கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

லம்போர்கினி அவெண்டேடார் மற்றும் உருஸ் சூப்பர் கார்களை வைத்து நடத்தப்பட்ட சாகசம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

தனது வீடியோவிற்கு பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக யுடியூப் சேனல்களை நடத்துபவர்கள் குட்டி கரணம் எல்லாம் போட்டு வருகின்றனர்.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

ஏனெனில் சிறந்த வீடியோக்களை தர ஒவ்வொருத்தருக்கும் இடையே பலத்த போட்டி உள்ளது. பைக் அல்லது கார் இருக்கும் வீடியோக்கள் எப்போதுமே நமக்கு புதுமையான சுவாரஸ்யத்தை வழங்கக்கூடியவை.

இதுபோன்ற சுவாரஸ்யமான கார் சாகச வீடியோவை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். ஸ்ட்ரீட் ஸ்பீடு 717 என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேல் உள்ள வீடியோவில் லம்போர்கினி உருஸ் காரில் அவெண்டேடார் சூப்பர்காரை தாண்டி சாகத்தை நிகழ்த்தியுள்ளனர்.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

வீடியோவின் துவக்கத்தில் இரு லம்போர்கினி கார்களும் கேரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் அவெண்டேட்டார் சூப்பர்கார் வீடியோவை பதிவிட்டவருக்கு சொந்தமானது எனவும், உருஸ் அவரது தோழிக்கு சொந்தமானது எனவும் செய்திகள் கூறுகின்றன.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

கேரேஜில் இருந்து வெளியே எடுக்கப்படும் கார்கள் அதன்பின் திட்டமிட்டப்படி காலியான மைதானத்திற்கு கொண்டுவரப்படுகிறது. இந்த பகுதியில் பள்ளங்கள் அதிகமாக உள்ளன, சாலையும் நல்ல தரத்தில் இல்லை.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

அதுமட்டுமில்லாமல் தனது அவெண்டடோர் காரில் முன்பக்கத்தை தூக்கும் சிஸ்டம் (நோஸ் லிஃப்ட் சிஸ்டம்) சரியாக செயல்படுவதில்லை என்பதையும் வீடியோவில் அதன் உரிமையாளர் கூறியுள்ளார். இருப்பினும் கார் எந்தவொரு இடத்திலும் தரையிலும் இடித்தது போல் இந்த வீடியோவில் பார்க்க முடியவில்லை.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு வந்த பின்னர் லம்போர்கினி அவெண்டடோர் கார் வெட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் சரியாக நிறுத்தப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து காரின் கதவுகளை திறந்து வெளியே வருவது சற்று சிரமமாக இருந்திருக்கும், ஆனால் இறக்கை போன்றதான கதவுகளை கொண்ட அவெண்டடோரில் அவ்வாறான சிரமம் எதுவும் ஏற்படவில்லை.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

அவெண்டடோரை சரியாக பார்க் செய்தபின் உருஸ் காரில் தாண்ட தயாராகுகின்றனர். அதற்கு முன், தாண்டும்போது எதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கா என்பதையும் ஒருமுறை சரிபார்க்கின்றனர்.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

இதற்காக அவெண்டடோர் இல்லாமல் வெறும் பள்ளத்தை உருஸ் காரில் தாண்டி பயிற்சி எடுத்து கொள்கின்றனர் (இதற்கு முன்பும் நிச்சயம் பல முறை பயிற்சி எடுத்திருப்பர்). இந்த சோதனை வெற்றிகரமானதை அடுத்து மீண்டும் அவெண்டடோர் பள்ளத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

அவெண்டடோரின் உரிமையாளர் தான் உருஸை இயக்கியுள்ளார். பள்ளத்தை தாண்டும் முன் உருஸின் முன்பக்கம் சற்று உயரத்திற்கு தூக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தாண்டும் போது உருஸின் டயர்கள் அவெண்டடோரின் மேற்கூரைக்கு மிக நெருக்கமாக சென்றுள்ளதை பார்க்க முடிகிறது.

கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களில் ஏன் இப்படி...? ஒரு வீடியோவிற்காக இவ்வளவு பெரிய ரிஸ்க்கா!!

இந்த சாகத்தில் எந்தவொரு சிறு தவறு ஏற்பட்டிருந்தாலும், அது மிக பெரிய செலவிற்கு உள்ளாகி இருக்கும். பல முறை தாண்டியதால் இந்த லம்போர்கினி உருஸ் காரில் எதாவது கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youtuber jumps Lamborghini Urus over an Aventador supercar. Read Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X