நிதி சேகரிப்பில் 7 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி ஹைப்பர்லோக்கல் மற்றும் இவி லாஸ்ட் மைல் டெலிவிரி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிப் எலக்ட்ரிக், தொடர் ஏ சுற்றில் 9 யூனிகார்ன்ஸ் மற்றும் ஆன்தில் வென்ச்சார் உடன் சேர்ந்து இந்திய இவி துறையில், சுமார் 7 மில்லியன் டாலர்களை திரட்டி, பெரிய அளவில் பந்தயம் கட்டியுள்ளனர்.

நிதி சேகரிப்பில் 12.5 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

இந்த சுற்றில் மார்க்யூ குடும்ப அலுவலக அதிகாரிகள் & ஆரம்ப கட்ட அதிகாரிகள், நானாவதி குடும்ப அலுவலம், வீ ஃபௌண்டர் சர்கிள், ரிஸ்கோ கேபிட்டல் ஃபண்ட்-ஐ சார்ந்த சிலிக்கான் வாலி, ஏற்கனவே உள்ள ஆர்வமிக்க முதலீட்டாளர்களுடன் தொலாகியா வென்ச்சர்ஸ் மற்றும் ஐஏஎன் ஃபண்ட் ஆகிய தரப்புகளில் இருந்து பங்கேற்பு இருந்தது.

நிதி சேகரிப்பில் 12.5 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

அதேநேரம் வார்ஹௌஸ் நௌ-இன் தருண் சராஃப், ஏ.டபிள்யூ.எல் லாஜிஸ்டிக்ஸின் ராகுல் கெரா உள்ளிட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்றனர். இப்போது மீண்டும் தனிப்பயன்பாட்டு நிதியில் புதிய முதலீட்டால், ஜிப் நிறுவனம் இப்போது வரையில் 12.5 மில்லியன் டாலர்களை திரட்டி உள்ளது.

நிதி சேகரிப்பில் 12.5 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தை ஆகாஷ் குப்தா மற்றும் ரிஷி அகர்வால் ஆகியோர் இணைந்து 2017ல் நிறுவினர். தங்களது வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடகை விடுதல் இவர்களது முக்கிய நோக்கமாகும். இந்திய போக்குவரத்தை மின்மயமாக்கலையும், ஹைப்பர்லோக்கல் டெலிவிரி வணிகத்தையும் ஒரே நேரத்தில் இந்த நிறுவனம் கையாண்டு வருகிறது.

நிதி சேகரிப்பில் 12.5 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

சிறந்த இவி, பேட்டரி நீக்கக்கூடிய கட்டமைப்பு, ஐஓடி மற்றும் AL/ ML ப்ளாட்ஃபாரம் உள்ளிட்டவற்றின் மூலமாக லாஸ்ட் மைல் டெலிவிரிகளை வழங்கவும், அவற்றை உருமாற்றம் செய்து கொண்டே இருக்க போவதும் தான் ஜிப் எலக்ட்ரிக்கின் எதிர்கால இலட்சியமாக உள்ளது.

நிதி சேகரிப்பில் 12.5 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

ஏனெனில் அப்போது தான், இ-காமர்ஸ், இ-மளிகை மற்றும் கிரானாக்கள் உள்பட அனைத்து வகையான வணிகங்களிலும், பெரிய இ-சில்லறை வாடிக்கையாளர்களால் ஓர் நிலையான மற்றும் மலிவு விலையினை நிர்ணயிக்க முடியும் என ஜிப் எலக்ட்ரிக் நம்புகிறது. இத்தகைய எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனம் சுமார் 200க்கும் மேற்பட்ட பி2பி மளிகை மற்றும் நாட்டின் பிற ஹைப்பர்லோக்கல் டெலிவிரி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

நிதி சேகரிப்பில் 12.5 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

இந்த 200 நிறுவனங்களில் பிக் பாஸ்கெட், அமேசான் ராபிடோ, ஃப்ளிப்கார்ட், ஸ்பென்சர்ஸ், க்ரோஃபர்ஸ், சிட்டிமால், டீல்ஷேர் உள்ளிட்டவை உள்பட பல வாடிக்கையாளர்களும் அடங்குகின்றனர். ஜிப் எலக்ட்ரிக்கிற்கு டெல்லி என்சிஆர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை & புனே நகரங்களில் 2000க்கும் மேற்பட்ட இவி-கள் உள்ளன.

நிதி சேகரிப்பில் 12.5 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

இதனை அடுத்த 12 மாதங்களில் 25 நகரங்களில் 10 ஆயிரம் வாகனங்களாக விரிவுப்படுத்த ஜிப் எலக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்காக ஹீரோ எலக்ட்ரிக், எட்ரியோ மற்றும் பியாஜியோ போன்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

நிதி சேகரிப்பில் 12.5 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

சமீபத்திய நிதி திரட்டலின் போது பேசிய ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆகாஷ் குப்தா, "எலக்ட்ரிக் லாஜிஸ்ட்டிக்கில் இந்தியா தற்போதைக்கு 123 பில்லியன் டாலர் சந்தையாகும். மேலும் இந்த இடத்தில் பல யூனிகார்ன்களை காணலாம். எலக்ட்ரிக் லாஜிஸ்ட்டிக்ஸ் இந்தியாவில் வளரும்போது நாங்கள் முன்னிலையில் இருக்க விரும்புகிறோம்.

நிதி சேகரிப்பில் 7 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

எங்கள் பெல்ட்டில் உள்ள அதிகளவிலான வாடிக்கையாளர்கள், சிறந்த குழு மற்றும் நாட்டின் மிக பெரிய இவி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு டெலிவிரியையும் மாசு-அல்லா போக்குவரத்தின் வாயிலாக வழங்குவது தான் எங்களது குறிக்கோள். மேலும் இது, ஜிப் பைலட்ஸ் என அழைக்கப்படும் எங்களது டெலிவிரி நிர்வாகிகளுக்கு அதிக சேமிப்பையும் உருவாக்கும்.

நிதி சேகரிப்பில் 7 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

எங்களையும், எங்கள் வளர்ச்சி பார்வையையும் நம்பிய அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். ஜிப் எலக்ட்ரிக் இந்த புதிய நிதி தொகையை கொண்டு அடுத்த 12 மாதங்களில் நாட்டில் லைட் இவி வணிகத்தை எளிய சார்ஜிங் தீர்வுகளுடன் விரிவுப்படுத்தும் நோக்கில், தனது நிறுவனத்தை பலப்படுத்தி கொள்ளவுள்ளது.

நிதி சேகரிப்பில் 7 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

அதுமட்டுமில்லாமல் இந்த தொகை தற்போதைய இவி-களில் சிறந்த மாடலை வாங்கவும், சிறப்பான சேமிப்பு மற்றும் வருவாயை டெலிவிரிகளின் மூலம் டெலிவி நிர்வாகிகள் பெறும் வகையிலான தொழிற்நுட்பத்திலும் செலவிடப்பட உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் ஜிப் 10 நகரங்களில் இருந்து 25 நகரங்களுக்கு விரிவடைந்து அதன் இவி படையை 1 லட்ச யூனிட்களாக வளர்க்கும் என மிகவும் உற்சாகமாக கூறினார்.

நிதி சேகரிப்பில் 7 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

இவி சந்தையில் மற்றும் ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தில் உள்ள எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்த 9 யூனிகார்ன்ஸ் & வென்ச்சர் கேடலிஸ்ட்களின் நிறுவனர் டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா, இந்தியாவில் இவி சந்தை 2030க்குள் $206 பில்லியன் சந்தையாக இருக்கும்.

நிதி சேகரிப்பில் 7 மில்லியன் டாலர்களை கடந்தது ஜிப் எலக்ட்ரிக்!! யூனிகார்ன்கள் தொடர்ந்து அதிகரிப்பு

குறிப்பாக இருசக்கர வாகன பிரிவில் 100% அன்னிய முதலீட்டிற்கான சாத்தியம் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை மலிவு விலை உற்பத்தி செய்ய மத்திய அரசு உருவாக்கிய பல்வேறு திட்டங்களினால் இந்திய சந்தை 2030க்குள் 206 பில்லியன் டாலர்களை தொடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் யூனிகார்னாக இருக்கும் ஜிப்பின் திறனை பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.

Most Read Articles
English summary
Zypp Electric raises $7 mn Series A funding to Electrify Indian EV Space
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X