சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான மின்சார காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ போகும்!

சாலை ஓரமாக துருவிற்கு இரையாகிக் கொண்டிருந்த விண்டேஜ் கார் தற்போது மின்சார காராக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

விண்டேஜ் ரக வாகனங்களுக்கு எப்போதுமே இந்தியாவில் மவுசு அதிகம். அது இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி, எந்த மாதிரியான கிளாசிக் வாகனமாக இருந்தாலும் அதற்கு வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் 1954 ஆண்டு மாடல் ஃபியாட் மில்லேசென்டோ (1954 Fiat Millecento) கார் இ-வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

ஃபியாட் மில்லேசென்டோ காருக்கு இப்போதும் ரசிகர்கள் ஏராளம். எனவேதான் குறிப்பிட்ட சில வாகன ஆர்வலர்களின் இல்லத்தில் தற்போதும் புதுப்பொலிவுடன் ஃபியாட் மில்லேசென்டோ பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இத்தகைய ஓர் காரே தற்போது மின்சார வெர்ஷனுக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் அடார் டிகட்ரான் (Ador Digatron) எனும் நிறுவனமே ஃபியாட் மில்லேசென்டோ காரை இ-காராக மாற்றிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் இ-மொபிலிட்டி, பேட்டரி மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

இந்த நிலையிலேயே மிகவும் அழகான எலெக்ட்ரிக் காரை உருவாக்கி, அது தற்போது மின்வாகன மாடிஃபிகேஷன் பணியிலும் களமிறங்கியிருக்கின்றது. மின்சார காராக மாற்றப்பட்டிருக்கும் ஃபியாட் மில்லேசென்டோ காருக்கு இ-டிக்கி (E-Diggi) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்காரை மின்சார வாகனமாக மாற்றுவதற்காக பல்வேறு பாகங்கள் அகற்றப்பட்டு, புதிய பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

அந்தவகையில், மிக முக்கியமான சிறப்பம் சேர்ப்பாக 48 வோல்ட் / 10 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் இணைக்கப்பட்டிருப்பது உள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இத்துடன், 21 kW வசதிக் கொண்ட மின் மோட்டார் இ-டிக்கியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இத்தகைய வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காராகவே ஃபியாட் மில்லேசென்டோ உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

ஃபியாட் மில்லேசென்டோ இ-டிக்கியாக உருவாகிய கதை:

புனேவில் பேக்கரி கடைக்காரராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரருக்கு சொந்தமானதே இந்த கிளாசிக் கார் ஃபியாட் மில்லேசென்டோ என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயன்பாடற்ற நிலையில் இக்கார் சாலையில் விடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதைக் கண்ட அடார் டிகாட்ரான் நிறுவனம், காரின் அருமையை உணர்ந்து அக்-காருக்கு புத்துயிர் வழங்க முடிவு செய்தது.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

ஆனால், இந்தியாவில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால், இக்காரை மீண்டும் எரிபொருளில் இயங்கும் வாகனமாக உருவாக்குவது எந்த வகையிலும் பயனளிக்காது என்பதை உணர்ந்த அடார் டிகாட்ரான், அதனை மின்சார வெர்ஷனாக உருவாக்க திட்டமிட்டது. இந்த திட்டத்தை தற்போது முழுமையாக்கியும் காட்டியிருக்கின்றது.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

அசல் நிறத்திலேயே கார் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்னதாக என்ன நிறத்தில் அது காட்சியளித்ததோ அதே நிறத்திலேயே இப்போது மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றது. அதேவேலையில், புதிதாக இ-டிக்கி எனும் பெயர் ஸ்டிக்கர்கள் காரின் பக்கவாட்டு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

Source: Energizing India.TV

முன்னதாகப் பிரீமியர் பத்மினியின் எஞ்ஜினிலேயே இக்கார் இயங்கிக் கொண்டிருந்தது. இதனையே வெளியேற்றிவிட்டு தற்போது மின்மோட்டார் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. பழைய வாகனங்களை இவ்வாறு பசுமை (மின்) வாகன மாற்றுவதன் வாயிலாக அவற்றை சுற்றுச்சூழலுக்கு நண்பனாக மாற்ற முடியும். அதாவது, மாசு ஏற்படுத்தா வாகனமாக அவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.

சாலை ஓரத்துல மக்கி கொண்டிருந்த விண்டேஜ் கார்... தரமான எலெக்ட்ரிக் காராக மாற்றம்! முழு சார்ஜில் எத்தன கிமீ பயணிக்கும்?

இதன் வாயிலாக தாத்தா, அப்பா என குடும்பத்தின் முக்கியமான நபர்களின் ஞாபகமாக வைத்திருக்கும் விண்டேஜ் கார்களை கூடுதல் சில ஆண்டுகள் நம்முடன் வைத்திருக்க முடியும். ஆனால், இதற்கு முறையாக ஆர்டிஓ-விடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயம். பழைய வாகனங்களை மின் வாகனமாக மாற்றி, அதனை பயன்படுத்துவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படாத நிலையே தற்போது வரை நாட்டில் நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: கடைசி படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.

Most Read Articles
English summary
1954 fiat millecento converted into e car
Story first published: Tuesday, May 24, 2022, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X