அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

மூன்றாவது தலைமுறை ஆடி க்யூ3 காருக்கு இந்தியாவில் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

இந்தியாவில் மூன்றாவது தலைமுறை ஆடி க்யூ3 (Audi Q3) காருக்கு தற்போது அதிகாரப்பூர்வமான முறையில் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 2 லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஆடி க்யூ3 காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது சற்று விலை உயர்ந்த கார் என்பதால், முன்பதிவு செய்வதற்கான தொகையும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

இதற்கிடையே நடப்பு 2022ம் ஆண்டின் இறுதிக்குள், மூன்றாவது தலைமுறை ஆடி க்யூ3 காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்பார்ம் (MQB Platform) அடிப்படையில், மூன்றாவது தலைமுறை ஆடி க்யூ3 கார் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாகதான் ஆடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆடி மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு பிரபலமான பிராண்டுகளும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாகவே இயங்கி கொண்டுள்ளன. இதற்கிடையே மூன்றாவது தலைமுறை ஆடி க்யூ3 காரின் முன் பகுதியில் பெரிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

அத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்களும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த காரின் பின் பகுதியில் எல்இடி டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரின் முன் மற்றும் பின் பக்க பம்பர்களும் ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது தலைமுறை க்யூ3 காரின் வெளிப்புறத்தை போல், உட்புறத்தையும் ஆடி நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

இந்த காரின் உட்புறத்தில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன. மேலும் பனரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளையும், மூன்றாவது தலைமுறை க்யூ3 காரில் ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

செயல்திறனை பொறுத்தவரையில், மூன்றாவது தலைமுறை ஆடி க்யூ3 காரில், 2.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 4,200-6,000 ஆர்பிஎம்மில் 187 பிஹெச்பி பவரையும், 1,500-4,100 ஆர்பிஎம்மில் 320 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

அதே நேரத்தில் இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடி நிறுவனத்தின் க்வாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் (Quattro All-wheel Drive System), மூன்றாவது தலைமுறை க்யூ3 காரில் இடம்பெற்றுள்ளது. ஆடி க்யூ3 கார் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த கூடியது.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

மூன்றாவது தலைமுறை க்யூ கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7.3 வினாடிகளில் எட்டிவிடும் என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 222 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு வசதிகளிலும், ஆடி க்யூ3 கார் தலைசிறந்து விளங்கும்.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகளை மூன்றாவது தலைமுறை ஆடி க்யூ3 கார் பெற்றுள்ளது. 2022 ஆடி க்யூ3 கார் இந்திய சந்தையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும். அவை பிரீமியம் ப்ளஸ் (Premium Plus) மற்றும் டெக்னாலஜி (Technology) ஆகும்.

அடேங்கப்பா... இந்த காரை புக்கிங் பண்றதுக்கே இவ்ளோ காசு கட்டணுமா? எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

புதிய 2022 ஆடி க்யூ3 எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் இந்த புதிய மாடலின் விலைகளை ஆடி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இதை தொடர்ந்து நாங்கள் ஏற்கனவே கூறியதை போல், 2022ம் ஆண்டின் இறுதிக்குள் டெலிவரி பணிகள் தொடங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
2022 audi q3 bookings open in india
Story first published: Thursday, August 11, 2022, 20:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X