ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்3 (X3) சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பல்வேறு புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் உடன் வந்திருக்கும் இக்கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), எக்ஸ்3 (X3) மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வாகனமாகும். மிகுந்த ஸ்போர்ட்டியர் மற்றும் கூடுதல் மாடர்ன் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

இவற்றையே புதுப்பித்தல்களாக இந்த ஆடம்பர காரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமின்றி இதன் தோற்றத்தையும் பிஎம்டபிள்யூ ரீஃப்ரெஸ் செய்திருக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட தோற்றம் எக்ஸ்3-க்கு மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

இதுமட்டுமின்றி, வாகனத்தின் உட்பக்கமும் அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாக காட்சியளிக்கின்றது. இதற்கேற்க அதி-நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது. இரு விதமான ட்ரிம்கள் மற்றும் ஒற்றை பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

அறிமுக விலையாக ரூ. 59.90 லட்சம் என்ற விலை இக்காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்ட்ரைவ்30ஐ ஸ்போர்ட்எக்ஸ் ப்ளஸ் வேரியண்டின் விலை ஆகும். இதன் எம் ஸ்போர்ட் வேரியண்டிற்கு ரூ. 65.90 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரை ப்ரீ புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு 20 இன்ச் அளவுள்ள எம் அலாய் வீலை இலவசமாக வழங்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுப்பித்தலின் வாயிலாக எக்ஸ்3 காரின் முகப்பு பகுதி மறு வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. கிட்னி க்ரில், மேட்ரிக்ஸ் ரக அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட் மற்றும் புதிய ஸ்லிம்மான எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

நாங்கள் ஏற்கனவே கூறியதைப் போல காரின் உட்பக்கம் மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றது. 12.3 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இணைப்பு வசதி கொண்டது), டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹர்மன்-கர்டோன் மியூசிக் சிஸ்டம், 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, பனோரமிக் கிளாஸ் சன்ரூஃப், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். டீசல் எஞ்ஜின் தேர்வு இதில் வழங்கப்படவில்லை. இந்த பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 248 எச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

இதுமட்டுமின்றி வெறும் 6.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனை இக்கார் கொண்டிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 235 கிமீ ஆகும். பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட், லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுக்கு இந்தியாவில் போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 அறிமுகம் குறித்து நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் விக்ரம் பவா கூறியதாவது, "எஸ்யூவி பிரிவின் பிரீமியம் மிட்-சைஸ் மாடலாக இப்புதிய மூன்றாம் தலைமுறை எக்ஸ்3 கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் ஓட்டுநர் செயல்திறன் ஆகியவை இந்த காரை ஆடம்பரமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற காராக மாற்றியிருக்கின்றது.

ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 59.90 லட்சம்... பிஎம்டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்!

மேலும், சாலையில் இது சுறுசுறுப்பானதாக காட்சியளிக்கும். சக்திவாய்ந்த டிரைவ் சிஸ்டம், ஸ்போர்ட்டி டைனமிக்ஸ் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இது சிலிர்ப்பை ஏற்படுத்தும் இயக்க அனுபவத்தை வழங்கும். ஆகையால், புதிய எக்ஸ்3 வரம்பற்ற செயல்பாட்டைக் கொண்ட வாகனமாக காட்சியளிக்கின்றது" என்றார்.

Most Read Articles
English summary
2022 bmw x3 facelift launched in india at rs 59 90 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X