விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

விற்பனையில் இருக்கும் சி5 ஏர்க்ராஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் சிட்ரோன் உள்ளது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் புதியதாக வெளியிடப்பட்டுள்ள 2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வீடியோவை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

பிரெஞ்சு கார் பிராண்டான சிட்ரோன் இந்தியாவில் கடந்த 2021இல் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் மூலம் நுழைந்தது. ஆனால் இந்த சி5 மாடலின் விலை சற்று அதிகமாக ரூ.30- 35 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டதால், சிட்ரோனின் பெயர் பெரியதாக நம் நாட்டில் பிரபலமாகவில்லை. இதனாலேயே, உடனடியாக அதன்பின் 2022இன் துவக்கத்தில் அனைவரும் வாங்கக்கூடிய காராக, இந்திய சந்தைக்கு ஏற்ற விலையில் சி3 கொண்டுவரப்பட்டது.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

இந்த நிலையில் அறிமுகம் செய்து 1 வருடம் நிறைவடைந்துவிட்டதால், சி5 ஏர்க்ராஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தும் வேலையில் சிட்ரோன் இறங்கியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் சி5 ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

வீடியோவில், "புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி விரைவில் வருகிறது. அது அசத்தலான டிசைன், புதிய தொழிற்நுட்பம் மற்றும் விசாலமான இடவசதி உடன் நீங்கள் தனித்து விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது (சி5 ஃபேஸ்லிஃப்ட்) பல்வேறு இயலாத காரியங்களுக்கான கதவுகளை திறக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் உலகளவில் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஏறக்குறைய 1 வருடம் கழித்து அது தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த அப்டேட்டினால் இந்தியாவிலும் சி5 ஏர்க்ராஸ் மாடல் புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாறும். இதனால் விற்பனையும் பெருகும் என்கிற நம்பிக்கையில் சிட்ரோன் உள்ளது.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

தற்சமயம் விற்பனையில் இருக்கும் மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் முற்றிலும் புதிய முன்பக்க தோற்றத்தை பெற்றுள்ளது. இதனை தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் தெளிவாக காண முடியும். தற்சமயம் சிட்ரோன் சி5 எஸ்யூவி காரில் ஹெட்லேம்ப் அமைப்பானது இரண்டாக பிளவுப்பட்டதாக வழங்கப்படுகிறது. இது புதிய சி5 ஃபேஸ்லிஃப்ட்டில் ஒற்றை துண்டாக மாறவுள்ளது.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

இந்த மாற்றத்துடன் எல்இடி தொழிற்நுட்பத்தில் இரு பகல்நேரத்திலும் ஒளிரும் விளக்குகளை (DRLs) அப்டேட்டின் ஒரு பகுதியாக சிட்ரோன் சி5 பெறவுள்ளது. முன்பக்க பம்பரின் வடிவம் மாற்றப்படுகிறது. அத்துடன் அதில் செங்குத்தான காற்று ஏற்பான்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் புதிய வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள் பொருத்தப்பட உள்ளன.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

இத்துடன் அப்டேட்கள் நின்றுவிடவில்லை. 18-இன்ச்சில் அலாய் சக்கரங்கள், பளபளப்பான கருப்பு நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள், மேட் கருப்பு நிறத்தில் மேற்கூரை கம்பிகள் உள்ளிட்டவை சிட்ரோன் பிராண்டின் புதிய லோகோ உடன் வழங்கப்பட உள்ளன. முன்பக்கத்தை போல் சி5 ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புற கேபினும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களை பெற்றுள்ளது.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

முன் இருக்கைகளுக்கு முன்னால் இருக்கும் காக்பிட் ஆனது நமக்கு சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள சி5 எக்ஸ் காரை ஞாபகப்படுத்துகிறது. டேஸ்போர்டில் தனித்து நிற்கும் 10-இன்ச் திரை உடன் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு வழங்கப்பட்டிருக்க, அதற்கு கீழே மைய கன்சோல் பகுதியும் புதியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

அதேபோல், இருக்கைகள் கூடுதல் சவுகரியமானவைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ட்ரைவ் செய்வதற்கு மோட் (Mode)-ஐ ஹைப்ரிட், எலக்ட்ரிக் & ஸ்போர்ட் மோட்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். இதில் ஸ்போர்ட் மோட்கள் ஹைப்ரிட் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஹைப்ரிட் வேரியண்ட்கள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே.

விற்பனை பெரிசா இல்லைனாலும்... இந்தியாவில் தனது முதல் காரை அப்டேட் செய்யும் சிட்ரோன்!! இனி நல்லது நடந்தா சரி...

ஆதலால் ஹைப்ரிட் வேரியண்ட்கள் வழங்கப்பட்டால், ஸ்போர்ட் மோட்களும் கிடைக்கும். ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள 2022 சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் பெட்ரோல், டீசல் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரிட் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் மட்டுமே சி5 ஏர்க்ராஸ் மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
2022 citroen c5 aircross facelift will launch soon in india rival hyundai tucson
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X