Just In
- 15 min ago
ஜீப் காம்பஸ் அறிமுகமாகி அதற்குள் 5 வருஷம் ஆயிடுச்சா!! புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
- 55 min ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 2 hrs ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 3 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
Don't Miss!
- Finance
ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு.. இனி மக்கள் நிம்மதியாக இருக்கலாம்..!!
- Movies
ஜெயிலர் படத்தில் இவங்க தான் ஹீரோயினா? இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே.. முதல்முறையாக ரஜினியுடன்!
- News
தமிழக பொறியியல் கலந்தாய்வு.. கல்லூரிகளில் 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் இடங்கள் காலி
- Sports
சிஎஸ்கே வீரர் அதிரடி.. 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு சோகம்
- Technology
நோ, நோ, தோற்ற இடத்திலேயே ஜெயிப்போம்., இது நல்ல பாடம்: ISRO வின் அடுத்த பிளான்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ஹூண்டாய் அவ்ரா செடானில் மற்றுமொரு சிஎன்ஜி வேரியண்ட்!! அலாய் சக்கரங்கள், பார்க்கிங் கேமிரா என பல புதிய வசதிகள்!
ஹூண்டாயின் விலை குறைவான செடான் காராக விளங்கும் அவ்ராவில் விரைவில் புதியதாக சிஎன்ஜி வேரியண்ட் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து இணையத்தில் கசிந்துள்ள விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் மாற்று எரிபொருளை விரும்ப துவங்கியுள்ளனர். இதற்கேற்ப மத்திய அரசும் நெகிழ்வு எரிபொருள்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியையும், விற்பனையையும் ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில்கூட மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர்களையும், லாரிகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இவ்வாறு மத்திய அரசுடன் இணைந்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் மக்களை மாற்று எரிபொருளை கொண்டுச்செல்ல தங்களால் இயன்ற காரியங்களை செய்து வருகின்றன.

இந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடே சிஎன்ஜி வாகனங்கள். இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் மாருதி சுஸுகி, ஹூண்டாய் போன்ற முன்னணி பிராண்ட்களில் இருந்து வெளிவந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மலிவான செடான் மாடலான அவ்ராவில் புதியதாக சிஎன்ஜி வேரியண்ட்டை களமிறக்க ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில்தான் புதிய அவ்ரா சிஎன்ஜி காரை பற்றிய விபரங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக தெரியவந்துள்ளன. அவ்ரா செடான் மாடலில் ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனம் சிஎன்ஜி வேரியண்ட்டை அதன் 2ஆம் நிலை எஸ் வேரியண்ட்டில் வழங்கி வருகிறது. இது போதாதென, விரைவில் அவ்ராவின் எஸ்.எக்ஸ் வேரியண்ட்டின் அடிப்படையிலும் சிஎன்ஜி வெர்சனை ஹூண்டாய் கொண்டுவர உள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமான அதே 1.2 லிட்டர் பை-ஃப்யுல் பெட்ரோல்/சிஎன்ஜி மோட்டார் உடனே இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றாலும், எஸ்.எக்ஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் களமிறக்கப்படுவதால் கூடுதல் வசதிகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, புதிய அவ்ரா எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில் 37 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் மற்றும் 10 கிலோ எரிவாயு கொள்ளளவு பகுதியும் வழங்கப்பட உள்ளது.

இதன் பெட்ரோல் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-இல் 83 எச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெறலாம். ஆனால் சிஎன்ஜி மோட்டாரின் உதவியினால் அதிகப்பட்சமாக 69 பிஎஸ் மற்றும் 95 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே கிடைக்கும். இதன் மூலமாக காரின் எரிபொருள் திறன் மேம்படுகிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

புதிய அவ்ரா எஸ்.எக்ஸ் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் கூடுதல் டிரான்ஸ்மிஷன் தேர்வாக ஏஎம்டி கியர்பாக்ஸை ஹூண்டாய் வழங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், அவ்ராவின் இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் 15-இன்ச் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன. தற்போதைய அவ்ரா எஸ் சிஎன்ஜி வேரியண்ட்டில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் காரை சுற்றிலும் சிஎன்ஜி முத்திரை இருக்கும் என்பதும் உறுதி.

இவை தவிர்த்து இந்த புதிய அவ்ரா சிஎன்ஜி காரின் தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தொழிற்நுட்ப அம்சங்களில், தற்போதைய அவ்ரா எஸ் சிஎன்ஜி வேரியண்ட்டுடன் ஒப்பிடுகையில் புதிய எஸ்.எக்ஸ் சிஎன்ஜி வேரியண்ட் ரிவர்ஸில் வருவதற்கு உதவியாக பார்க்கிங் கேமிரா, சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, க்ரோம் பதியப்பட்ட கதவு கைப்பிடிகள், டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பெற்றுவர உள்ளது.

இவை தவிர்த்த மற்ற வழக்கமான ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடிய 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, உரிமையாளர் குரல் அடையாளமறிதல், லக்கேஜ் வைக்கும் பகுதியில் விளக்கு, முன் இருக்கை பயணிக்கு முகம் பார்க்க உதவி கண்ணாடி, அழுத்து ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உடன் ஸ்மார்ட் சாவி முதலியவற்றையும் புதிய அவ்ரா எஸ்.எக்ஸ் சிஎன்ஜி காரில் எதிர்பார்க்கலாம்.