Just In
- 20 min ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 1 hr ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 15 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- Sports
புயலாய் வந்து காணாமல் போன தமிழக வீரர்.. மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.. விளையாடிய காதல்
- Movies
Laal Singh Chaddha Twitter Review: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு?
- News
ஆடித்தபசு விழா கோலாகலம்.. கோமதி அம்மனுக்கு காட்சி அளித்த சங்கரநாரயணர்..பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
- Finance
சீனாவிடம் யாரும் கடன் வாங்காதீங்க.... எச்சரிக்கை விடும் வங்கதேச அமைச்சர்!
- Technology
பாச மலர்களுக்கு அன்பு பரிசு: Slim ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்கலாம்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
ஜீப் நிறுவனத்தின் 2022 மெரிடியன் கார் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இந்த காரின் செயல் திறன் எப்படி இருக்கும்? இந்த காரின் வேரியன்ட், விலை குறித்த விபரங்களைக் கீழே காணலாம்.

இந்தியாவில் சமீபகாலமாக எஸ்யூவி கார்களுக்கு தனி மவுசு உள்ளது. மக்கள் பலர் எஸ்யூவி ரக கார்களை விரும்பி வாங்கத் துவங்கியதால் அந்த செக்மெண்டில் கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த எஸ்யூவி கார்களில் ஜீப் நிறுவனத்திற்கு என தனிப் பெயர் உள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட ஜீப் காம்பஸ் கார் பல தரப்பு மக்களை ஈர்த்தது. இந்நிலையில் இது போல ஜீப் மெரிடியன் காரையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று (மே 19ம் தேதி) ஜீப் நிறுவனம் 2022 ஜீப் மெரிடியன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செய்தி ஜீப் வாகன ரசிகர்களை உற்சாகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. ஜீப் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் இந்த காருக்காக ரூ50 ஆயிரம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து இந்த காரை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை இந்த காரை 1200க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த கார் இன்று அறிமுகமாகிறது.

இந்த கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரஞ்சன்கான் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தயாராகிறது. இந்த கார் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே விற்பனையிலிருந்தாலும் தற்போது அதில் சில மாற்றங்களைச் செய்து தற்போது அறிமுகமாகியுள்ளது.

ஜீப் காம்பஸ் காரில் இரண்டு வரிசை சீட் எஸ்யூவி காரிலிருந்து மாறுபட்டு மெரிடியன் காரில் மூன்று வரிசை சீட்களுடன் பெரிய எஸ்யூவி காராக அறிமுகமாகியுள்ளது. பார்க்க பெரும்பாலும் ஜீப் காம்பஸ் டிசைனைபெற்றிருக்கிறது. ஆனால் அதை விட சற்று உயரமும் அகலமும் அதிகமாக உள்ளது.

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே ஆகிய ஆப்ஷன்களும் உள்ளன.

இத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன் ரூஃப், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, ஐஎஸ்ஓபிக்ஸ் குழந்தைகளுக்கான சீட் மவுண்டுகள், கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் நேரடியாக மார்கெட்டில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் மல்டிஜெட் 2 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் ஜீப் காம்பஸ் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 1956 சசி திறனுடன் 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆகிய ஆப்ஷன்களுடன் வருகிறது.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன முக்கியமாக 6 ஏர்பேக்குகள், எலெக்டரானிக் பார்க்கிங் சிஸ்டம், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்ஷன் கண்ட்ரோல், கேமராவுடன் கூடிய ரியர் பார்க்கிங் சென்சார், ஹில் அசிஸ்ட், சீட்பெல்ட் ரிமைண்டர், பின்பக்க வைப்பர் என பல அம்சங்கள் இந்த காரில் உள்ளது.

இந்த காரை பொருத்தவரை மொத்தம் 2 வேரியண்ட்களில் வருகிறது. ஒன்று லிமிட்டெட், மற்றொன்று லிமிட்டெட் (o) இந்த இரண்டு வேரியன்ட்களிலும் ஒரே இன்ஜின் தான் ஆனால் லிமிட்டெட் வேரியன்டில் முன்பக்க டிரைவ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது. லிமிட்டெட் (o) காரை பொருத்தவரை முன்பக்க டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனும் வழங்கபடுகிறது. ஆல்வீல் டிரைவை பொருத்தவரை அது 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே வருகிறது.

Meridian | Price |
Limited MT FWD | ₹29,90,000 |
Limited (O) MT FWD | ₹32,40,000 |
Limited 9AT FWD | ₹31,80,000 |
Limited (O) 9AT FWD | ₹34,30,000 |
Limited (O) 9AT 4X4 | ₹36,95,000 |

இந்த கார் மொத்தம் 5 கலர் ஷேட்களில் வெளியாகிறது. மக்கள் அதிகம் விரும்பும் டெட்ரோ கிரீன் மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய கலர்களும் அதில் அடங்கும். இந்த கார் ஆரம்ப விலையாக ரூ 29.90 லட்சம் முதல் விற்பனையாகிறது. மெரிடியன் லிமிட்டெட் மேனுவல் கியர் முன்பக்க டிரைவ் கார் ரூ 29.90 லட்சம், லிமிட்டெட் (o) மேனுவல் கியர் முன் பக்க டிரைவ் ரூ32.40 லட்சம், லிமிட்டட் 9ஸ்பீடு ஆட்டோமெட்டிக் ரூ31.80 லட்சம், லிமிட்டெட் (o) 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் முன்பக்க டிரைவ் 34.30 லட்சம், லிமிட்டெட் (o) 9 ஸ்பீடு ஆல்வீல் டிரைவ் ரூ36.95 லட்சம் என எக்ஸ் ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!
-
விபத்து நடந்தா காசு மட்டும் கொடுத்து ஏமாறாதீங்க... என்ன செய்யனும்னு இங்க பாருங்க...
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!