Just In
- 3 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 4 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 16 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 19 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- News
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள்...முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Movies
பிரபாஸ் படத்தில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போட்டேன்.. நடிகர் பிருத்விராஜ் ஓப்பன் டாக்!
- Finance
தல தோனியிடம் உள்ள விலை உயர்ந்த 5 ஆடம்பர கார்கள்!
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) காரின் வருகை எப்போது என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டு மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காராக ஸ்கார்பியோ இருக்கின்றது. "இந்த காருதான் ஏற்கனவே சந்தையில் விற்பனையில் இருக்குதே, இதுக்காக ஏன் மக்கள் காத்துக் கொண்டிருக்கனும்?" என உங்களுக்கு கேட்க தோன்றலாம்.

மஹிந்திரா நிறுவனம் இக்காரை தற்போது வேற லெவலுக்கு அப்கிரேட் செய்திருக்கின்றது. அதிக இட வசதி, கட்டுமஸ்தான உடல் தோற்றம், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் என பல மடங்கு கவர்ச்சியான வாகனமாக அதனை உருவாக்கியிருக்கின்றது. இதனையே வெகு விரைவில் உலக சந்தையில் மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகைக்கே இந்தியர்கள் பலர் தற்போது காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர்.

நாளுக்கு நாள் இக்காருக்காக காத்திருப்போரின் பட்டியில் நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் காத்திருப்போர்களுக்கு ட்ரீட் வழங்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 27ம் தேதி அன்று இக்காரை வெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கான அழைப்பை ஊடக உலகிற்கு வழங்கும் பணியைகூட நிறுவனம் தொடங்கிவிட்டது. இந்த தகவல்கள் கூடுதல் மகிழ்ச்சியை ஸ்கார்பியோ கார் பிரியர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஸ்கார்பியோ என் என்கிற பெயரில் அது அறிமுகத்தைப் பெற இருக்கின்றது.

புதிய ஸ்கார்பியோ என் மாடலின் வருகை ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவை எந்த வகையிலும் பாதிக்காது என்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, இரண்டு தசாப்தங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவானது ஸ்கார்பியோ கிளாசிக் ஆக விற்பனையில் தொடரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

புதிய ஸ்கார்பியோ என் மடாலின் ஹைலைட்டான அம்சங்கள்:
புதிய ஸ்கார்பியோ என் இளைஞர்களையும், அதிக தொழில்நுட்ப வசதிகளையும் விரும்புபவர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை பார்வையிலேயே அனைவரையும் கவரக் கூடிய வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் போல்டான டிசைன் மற்றும் அட்டகாசமான டிரைவிங் பொசிஷன்களை புதிய ஸ்கார்பியோ என் பெற்றிருக்கின்றது.

பிரீமியமான இன்டீரியர், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் பல மேம்பட்ட நவீன அம்சங்களையும் ஸ்கார்பியோ என் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி, மேனுவல் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வு, இத்துடன் 4X4 தொழில்நுட்பம் விருப்ப தேர்வாக ஸ்கார்பியோ என் மாடலில் மஹிந்திரா நிறுவனம் வழங்க இருக்கின்றது.

இந்த தகவல்களுடன் சேர்த்து புதிய ஸ்கார்பியோ என் படங்களையும் மஹிந்திரா வெளியிட்டுள்ளது. ஆனால், காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய துள்ளியமான விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், சாலையில் பல பரீட்சைச் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களின் வாயிலாகவும், குறிப்பிட்ட தகவல்களின் வாயிலாகவும் இக்காரில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

அந்தவகையில், புதிய ஸ்கார்பியோ என், நிறுவனத்தின் புதிய லோகோவுடன் கூடிய பெரிய க்ரில்லைப் பெற இருப்பது உறுதியாகியுள்ளது. இத்துடன், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், பனி மின் விளக்குடன் கூடிய பம்பர், சி வடிவ எல்இடி பகல்நேர மின் விளக்கு, அகலமான ஏர் இன்டேக்கர், ஹெக்ஸோகனல் லோவர் க்ரில் இன்செர்ட் மற்றும் இரு நிற வீல்கள் உள்ளிட்டவை புதிய ஸ்கார்பியோ என் இல் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி, குரோம் பூச்சு கொண்ட கதவு கை பிடிகள், குரோம் விண்டோ லைன், தடிமனான ரூஃப் ரெயில்கள், ட்வீக் ரக பான்னெட், சைடு ஹிங்கட் டூர் கொண்ட பூட்லிட், அப்டேட் செய்யப்பட்ட பின் பக்க பம்பர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் புதிய ஸ்கார்பியோ என் வர இருக்கின்றது. இதைவிட மிக முக்கியமான மாற்றமாக புதிய சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் நிரப்பட்ட வாகனமாகவும் அது வர உள்ளது.

அந்தவகையில், புதிய டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், அப்டேட் செய்யப்பட்ட செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஃபிளாட்டான பாட்டம் கொண்ட ஸ்டியரிங் வீல், அதிக எண்ணிக்கையிலான ஸ்பீக்கர்கள், லெதர் இருக்கைகள், அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட், ஒயர்லெஸ் சார்ஜிங், சென்ட்ரல்லி மவுண்டட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கன்ட்ரோல், சன்ரூஃப், ஆறு ஏர் பேக்குள் உள்ளிட்ட அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
-
இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க தயாரானது முன்னணி பைக் நிறுவனம்... மொத்தமா 4 டூ-வீலர்களை களமிறக்க போறாங்களாம்!
-
கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?