மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க? இதோ முழு விபரம்

2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (2022 Maruti Alto K10) காரின் சிறப்பம்சங்கள் பற்றிய விபரத்தை வேரியண்ட் வாரியாக வெளியிட்டுள்ளோம்.

அதாவது, எந்த வேரியண்டில் என்ன மாதிரியான சிறப்பம்சங்களை ஆல்டோ கே10 காரில் வழங்கியிருக்கு என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

மாருதி சுஸுகி (Maruti) நிறுவனம் இந்தியர்களையும், இந்திய வாகன சந்தையையும் அதன் கட்டுப்பாட்டு வளையத்திற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் விதமான செயல்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் டொயோட்டா கூட்டணியின் வாயிலாக உருவாக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு புக்கிங்குகள் குவிந்துக் கொண்டிருக்கின்றது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்க்கும் வகையில் ஸ்விஃப்ட் (Swift) கார் மாடலில் புதிதாக சிஎன்ஜி (CNG) தேர்வை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் (ஆகஸ்டு 19) 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (2022 Maruti Alto K10) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இவ்வாறு இந்தியாவை தொடர்ச்சியாக புதுமுக வாகனங்களின் வாயிலாக மாருதி சுஸுகி அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

இந்த புதுமுகங்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையிலேயே மாருதி கார் விரும்பிகளுக்கு உதவும் வகையில் புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் 2022 ஆல்டோ கே10 காரின் வேரியண்ட் விபரங்களையும், வேரியண்ட் வாரியாக ஆல்டோ கே10 காரில் மாருதி சுஸுகி வழங்கியிருக்கும் சிறப்பு வசதிகள் பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

வேரியண்ட் விபரம்:

மாருதி சுஸுகி ஆல்டோ ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்டிடி, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ், விஎக்ஸ்ஐ பிளஸ் மற்றும் விஎக்ஸ்ஐ பிளஸ் (ஏஜிஎஸ்) ஆகிய வேரியண்டுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது. இவற்றில் எஸ்டிடி, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ பிளஸ் ஆகிய வேரியண்டுகளில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் பற்றிய விபரத்தையேக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

எஸ்டிடி வேரியண்ட்:

மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ கே10 காரின் எஸ்டிடி வேரியண்டில் 13 அங்குல வீல்கள் சென்டர் கேப்புடன் வழங்கப்பட்டிருக்கின்றது. காரின் உட்பக்கத்தில் பாட்டில் ஹோல்டர்கள், சன் விஷர்கள், கேபின் ஏர் ஃபில்டர், ரிமோட் ஃப்யூவல் லிட் ஓபனர், ரிமோட் பூட் ஓபனர், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களாக ரியர் சைல்டு லாக், முன் பக்கத்தில் ப்ரீ டென்ஷனுடன் கூடிய சீட் பெல்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், ட்யூவல் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

எல்எக்ஸ்ஐ வேரியண்ட்:

மேலே பார்த்த எஸ்டிடி வேரியண்டைக் காட்டிலும் சற்று அதிக அம்சங்கள் கொண்ட தேர்வாக எல்எக்ஸ்ஐ வேரியண்ட் இருக்கின்றது. இந்த தேர்வில் பாடி நிறத்திலான பம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹீட்டர் வசதிக் கொண்ட ஏசி, பவர் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் எஸ்டிடி வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களும் எல்எக்ஸ்ஐ வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

விஎக்ஸ்ஐ வேரியண்ட்:

உடல் நிறத்திலான டூர் ஹேண்டில்கள், ரூஃப் அன்டென்னா, முன் பக்கத்தில் பவர் விண்டோக்கள், அக்சஸெரி சாக்கெட், இன்டர்நெல்லி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், 2 டின் ஸ்மார்ட் பிளே ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன், மல்டி இன்ஃபர்மேஷன் திரை, இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் மற்ற கீழ் நிலை வேரியண்டுகளில் இடம் பெறாத அம்சங்களாக விஎக்ஸ்ஐ வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களாக ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டூர் லாக், இம்பேக்ட் சென்சிங் டூர் அன்லாக், எஞ்ஜின் இம்மொபிலைசர், சென்ட்ரல் டூர் லாக்கிங் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

விஎக்ஸ்ஐ பிளஸ்:

மேலே பார்த்த ஆல்டோ கே10 காரின் அனைத்து வேரியண்டுகளைக் காட்டிலும் விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்விலேயே மிக அதிக வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் மேலே பார்த்த அனைத்து வேரியண்டுகளிலும் இடம் பெற்றிருக்கும் அம்சங்களுடன் சேர்த்து இன்னும் பல புதிய மற்றும் கூடுதல் அம்சங்கள் விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

கூடுதல் அம்சங்களாக சில்வர் அக்செண்டுகள் காரின் உட்பகுதி டூர் ஹேண்டில், சென்டர் கார்னிஷ், சைடு லூவர்கள் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ரிமோட் சாவி, 17.78 அங்குல ஸ்மார்ட் பிளே திரை (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), மல்டி ஃபங்க்சன்கள் கொம்ட ஸ்டியரிங் வீல், ரியர் பகுதியில் பார்சல் டிரே, 4 ஸ்பீக்கர்கள் மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க?

சிறப்பு வசதிகளிலும், அலங்கார அம்சத்திலும் மாறுபட்டுக் காணப்படும் இந்த வேரியண்டுகள் எஞ்ஜின் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் கே10சி பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் 67 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், அதிகபட்சமாக 24.39 கிமீ தொடங்கி 24.90 கிமீ வரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அவை மைலேஜ் தரும்.

Most Read Articles
English summary
2022 maruti alto k10 hatchback variant wise features details
Story first published: Friday, August 19, 2022, 19:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X