மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

மாருதி ஆல்டோ கே10 கார் அதன் போட்டி கார் மாடல்களைக் காட்டிலும் விலை குறைவானதுதானா?.. என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

தெளிவாகக் கூற வேண்டும் என்றால் போட்டு கார் மாடல்களுடன் புதிய ஆல்டோ கே10 கார் மாடலின் விலையை ஒப்பீடு செய்து அதுகுறித்த தகவலை இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் இந்திய சந்தையில் நேற்றைய தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக காராகும். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் சிறிய கார் மாடலாகவும் இது உள்ளது. இத்தகைய ஓர் வாகனத்தையே மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு மாற்றங்களுடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

அப்டேட்டின் அடிப்படையில் புதிய அவதாரத்தை ஆல்டோ கே10 பெற்றிருக்கின்றது. இது ஆல்டோ 800 கார் மாடலுடன் சேர்ந்து இந்தியாவில் விற்பனையில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஆல்டோ கே10 காரின் வருகை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ், ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதுமட்டுமில்லைங்க இதன் வருகை நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான எஸ்-பிரஸ்ஸோவிற்கும் போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

எந்தெந்த நிலைகளில் ரெனால்ட் க்விட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் கார் மாடல்களுக்கு ஆல்டோ கே10 போட்டியாக உள்ளது என்பது பற்றிய தகவலை விரிவாக கீழே பார்க்கலாம், வாங்க.

இந்தியர்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேவேலையில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கும் இந்தியர்களுக்கு டிமாண்ட் நீடித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகியவை விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிய அவதாரத்தில் ஆல்டோ கே10 விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

இதன் ஆரம்ப விலை மிக மிக குறைவாகும். ரூ. 3.99 லட்சம் இக்காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய தலைமுறை ரூ. 3.39 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதைவிட ரூ. 60 ஆயிரம் அதிக விலையில் ஆல்டோ கே10 விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தளவு பெரும் தொகை உயர்த்தப்பட்ட போதிலும் 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 விற்பனைக்கு வந்தபோதிலும் போட்டியாளர்களைக் காட்டிலும் மலிவு விலைக் கொண்டதாகவே அவ்வாகனம் காட்சியளிக்கின்றது.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் இந்தியாவில் ரூ. 5.39 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல், ரெனால்ட் க்விட் ரூ. 4.64 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையிரண்டைக் காட்டிலும் மிகக் குறைவான விலையிலேயே ஆல்டோ கே10 விற்பனைக்கு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் ஆல்டோ கே10 விற்பனைக்குக் கிடைக்கும்.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

எஸ்டிடி, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ பிளஸ், விஎக்ஸ்ஐ (ஏடி) மற்றும் விஎக்ஸ்ஐ பிளஸ் (ஏடி) ஆகிய வேரியண்டுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது. இதில், எஸ்டிடி என்பதே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதுவே, ரூ. 3.99 லட்சம் என்ற குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், உயர்நிலை தேர்வாக விஎக்ஸ்ஐ பிளஸ் (ஏடி) இருக்கின்றது. இதன் விலை ரூ. 5.83 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

புதிய ஆல்டோ கே10 காரின் முழு விலை விபரப் பட்டியல்:

Alto K10 Manual Auto Gear Shift
STD ₹3,99,000
LXi ₹4,82,000
VXi ₹4,99,500 ₹5,49,500
VXi+ ₹5,35,500 ₹5,83,500
மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

இக்காரின் அனைத்து வேரியண்டுகளிலும் இரட்டை ஏபிஎஸ், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிஜிட்டல் திரை என எக்கசக்க அம்சங்கள் வழக்கமான அம்சமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அதேவேலையில், இதன் உயர்நிலை வேரியண்டே மிக மிக அதிக அம்சங்களைக் கொண்ட வாகனமாகக் காட்சியளிக்கின்றது. செலிரியோ கார் மாடலில் இருப்பதைப் போல 7 அங்குல தொடுதிரை சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

இதனால்தான் இதன் உயர்நிலை வேரியண்ட் மிக மிக அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. அதேவேலையில், இதேபோல் அதிக சிறப்பு வசதிகளுடன் ஆல்டோ கே10 காரின் போட்டியாளர்கள் பல லட்சம் அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. உதாரணமாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸின் உயர் நிலை தேர்வு ரூ. 8 லட்சத்திற்கும் அதிகமான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ரது.

மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

இதோ போட்டியாளர்களின் விலையும், மாருதி ஆல்டோ கே10 காரின் விலை விபரங்களும். உயர்நிலை மற்றும் ஆரம்ப நிலை வேரியண்டுகளுக்கு இடையே உள்ள விலை வித்தியாசத்தை இந்த பட்டியலின் வாயிலாக நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

Prices Maruti Alto K10 Renault Kwid Hyundai Grand i10 NIOS
Starting Price 3.99 Lakh (STD) 4.64 Lakh (RxL) 5.39 Lakh (Era)
Top-end Price 5.83 Lakh (VXi+ AT) 5.99 Lakh (Climber AT) 8.01 Lakh (Asta AMT)
மாருதி ஆல்டோ கே10 காரும் அதன் போட்டி கார் மாடல்களும்... விலையில் எது பெஸ்ட்? வாங்க பாத்திடலாம்!

மேலே உள்ள பட்டியல் 2022 மாருதி ஆல்டோ எந்தளவு குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த வாகனம் மாருதியின் மற்றுமொரு தயாரிப்பான எஸ்-பிரஸ்ஸோவைக் காட்டிலும்கூட பல மடங்கு விலைக் குறைவானதாகக் காட்சியளிக்கின்றது. எஸ்-பிரஸ்ஸோ இந்தியாவில் தற்போது ரூ. 4.25 லட்சம் தொடங்கி ரூ. 5.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: இந்த பதிவில் பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Most Read Articles
English summary
2022 maruti alto k10 vs competitor car models her is price comparison
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X