புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருக்காங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

Kia Carens: Driving Safe Cars | 10 Standard Safety Features For A Stress-free Journey

இந்த சூழலில் இந்த புதிய மாடலில், மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்த அதிரடியை செய்ய தயாராகி வருகிறது. அது என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, 2022 ஆல்டோ கே10 காரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலையை மாருதி சுஸுகி நிறுவனம் 3.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

ஸ்டாண்டர்டு (Standard), எல்எக்ஸ்ஐ (LXi), விஎக்ஸ்ஐ (VXi) மற்றும் விஎக்ஸ்ஐ+ (VXi+) என 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ+ வேரியண்ட்களில், ஏஜிஎஸ் எனப்படும் ஆட்டோ கியர் ஷிஃப்ட் (AGS - Auto Gear Shift) ஆப்ஷன் கிடைக்கும்.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே, 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால் பின்நாட்களில் இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனை அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாருதி சுஸுகி செலிரியோ காரில் வழங்கப்படும் அதே சிஎன்ஜி ஆப்ஷன், 2022 ஆல்டோ கே10 காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

மாருதி சுஸுகி செலிரியோ சிஎன்ஜி காரில், 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,300 ஆர்பிஎம்மில் 56 பிஹெச்பி பவரையும், 3,400 ஆர்பிஎம்மில் 82 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதே பவர் அவுட்புட் ட்யூனிங் உடன் கூடிய இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தேர்வுகள்தான், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

இதற்கிடையே தற்போது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில், K-சீரிஸ், 1.0 லிட்டர், ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம் 66 பிஹெச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் 2022 ஆல்டோ கே10 ஹேட்ச்பேக் காரின், விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ+ வேரியண்ட்களில் மட்டும்தான், ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. கிடைக்கும்.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜையும், ஏஜிஎஸ் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது எரிபொருள் விற்பனையாகி கொண்டிருக்கும் விலையை கருத்தில் கொள்ளும்போது, இவை மிகவும் சிறப்பான மைலேஜாக கருதப்படுகின்றன.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சிஎன்ஜி தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வெகு சமீபத்தில் கூட, ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் புதிய சிஎன்ஜி மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. எனவே 2022 ஆல்டோ கே10 காரின் புதிய சிஎன்ஜி மாடலையும், மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது ஆல்டோ காரில் அடுத்த அதிரடியை செய்ய ரெடியாகும் மாருதி... இதுக்காகதான் எல்லாரும் காத்திருங்காங்க!

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள காரணத்தால், சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் 2022 ஆல்டோ காரில், சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிஎன்ஜி மாடலுக்காக நிறைய பேர் காத்து கொண்டுள்ளனர்.

Most Read Articles
English summary
2022 maruti suzuki alto k10 cng variant launch details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X