Just In
- 11 hrs ago
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- 11 hrs ago
மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலையே ரூ. 1.49 லட்சம்தான்!
- 12 hrs ago
ஹூண்டாய் அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வு அறிமுகம்! பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!
- 12 hrs ago
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 ஆனா வளர்ச்சியில் செம அடி...
Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- News
"மாநிலங்களை ஆண்ட இசைஞானி" - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Movies
இளையராஜாவின் சாதனைக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்...கமல்ஹாசன் வாழ்த்து
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உண்மையாவே இது மாருதி கார்தானா? பிரம்மிப்பை ஏற்படுத்தும் புதிய பிரெஸ்ஸா... டாடாவிற்கு செக் வெச்சுட்டாங்க!
2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இதன் புதிய தலைமுறை மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் ஜூன் 30ம் தேதி (June 30) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா டீலர்ஷிப்கள் (Arena dealerships) வாயிலாக பிரெஸ்ஸா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே புதிய தலைமுறை பிரெஸ்ஸா காருக்கு அரேனா டீலர்ஷிப்களில் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஆகும். இந்த சூழலில், புதிய தலைமுறை பிரெஸ்ஸா காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

அங்கீகாரம் பெற்ற அரேனா டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ, புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். இதற்கிடையே புதிய பிரெஸ்ஸா காரின் டீசரையும் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில், மாற்றியமைக்கப்பட்ட பானெட்டை நம்மால் காண முடிகிறது.

அத்துடன் புதிய 'L' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் வெளிப்புற ரியர் வியூ மிரர்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய ரூஃப் ரெயில்களையும் நம்மால் கவனிக்க முடிகிறது. இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய ஹைலைட் என்னவென்றால், எலெக்ட்ரிக் சன்ரூஃப்தான் (Electric Sunroof). நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. ஆனால் இந்த விஷயம் உண்மைதான்.

பொதுவாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் சன்ரூஃப் வழங்கப்படாது. ஆனால் புதிய தலைமுறை பிரெஸ்ஸா காரில் மாருதி சுஸுகி நிறுவனம் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியை வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது சன்ரூஃப் வசதி வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், இது வாடிக்கையாளர்களை கவரக்கூடிய விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், புதிய 1.5 லிட்டர், K15C, நான்கு-சிலிண்டர், ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் நீண்ட நாட்களாக சேவையாற்றிய 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேடில் ஷிஃப்டர்கள் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய தலைமுறை பிரெஸ்ஸா காரில் பாதுகாப்பிற்காக மாருதி சுஸுகி நிறுவனம் 6 ஏர்பேக்குகளையும், இஎஸ்பி எனப்படும் (ESP - Electronic Stability Program) போன்ற வசதிகளை வழங்கியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கலாம். மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு புதிய அப்டேட்களை செய்துள்ளதால், புதிய தலைமுறை பிரெஸ்ஸா காரின் விலை, தற்போது இருப்பதை காட்டிலும், அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில் டாடா நெக்ஸான் (Tata Nexon) காரின் கை ஓங்கி வரும் நிலையில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Venue Facelift) மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இப்படி அதிகரித்து கொண்டே வரும் போட்டியை, புதிய தலைமுறை பிரெஸ்ஸா காரின் மூலம் சமாளிப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டாடா நெக்ஸான் காரின் ஆதிக்கம் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு பலர் மத்தியிலும் உருவாகியுள்ளது. இதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பிரமாண்டமாக அரங்கேறிய டெலிவரி நிகழ்வு! படத்துல இருக்க எல்லா ஸ்கூட்டரையும் ஒரே நாள்ல டெலிவரி கொடுத்திருக்காங்க!
-
தங்கம் அண்ணாவோட ஹெல்மெட் பத்திரமா இருக்கு! ஆனந்த கண்ணீரில் TTF ரசிகர்கள்! உண்மையில் என்ன நடந்துச்சு தெரியுமா?
-
மைல்டு, ஸ்டிராங், பிளக் இன் ஹைபிரிட் வாகனங்கள் என்றால் என்ன? மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?