அவன் அடிச்சா அடி விழாது... இடி விழும்! டாடா, மஹிந்திராவுக்கு ஆப்பு... இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலெக்ஸன்மா!

இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் (MG Hector) காருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், ஹெக்டர் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட 2023 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் எம்ஜி நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

2023 எம்ஜி ஹெக்டர் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி நிறுவனம் பொதுவாக தனது கார்களில் அதிநவீன வசதிகளை வாரி வழங்கும். ஹெக்டர் காரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஆரம்பத்தில் இருந்தே, போட்டியாளர்களை காட்டிலும் அதிகமான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஹெக்டர் காரில் எம்ஜி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த சூழலில், புதிதாக விற்பனைக்கு வரவுள்ள மாடலில் இன்னும் ஏராளமான புதிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அவன் அடிச்சா அடி விழாது... இடி விழும்! டாடா, மஹிந்திராவுக்கு ஆப்பு... இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலெக்ஸன்மா!

இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், 2023 எம்ஜி ஹெக்டர் மீதான ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எம்ஜி நிறுவனம் 2023 ஹெக்டர் காரை வரும் ஜனவரி 5ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், 2023 எம்ஜி ஹெக்டர் கார் தொடர்பாக மேலும் பல்வேறு புதிய தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன.

இதன்படி புதிய எம்ஜி ஹெக்டர் காரில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடாஸ் என்பது பல்வேறு வசதிகளின் தொகுப்பாகும். டிரைவர்கள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் காரை ஓட்டுவதற்கு அடாஸ் உதவி செய்கிறது. இந்திய சந்தையில் தற்போது அடாஸ் வசதி மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. எம்ஜி நிறுவனம் ஏற்கனவே க்ளோஸ்ட்டர் (Gloster), இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் (ZS EV) மற்றும் அஸ்டர் (Astor) ஆகிய கார்களில் அடாஸ் வசதியை கொடுத்துள்ளது.

இந்த வரிசையில் புதிய எம்ஜி ஹெக்டர் காரும் அடாஸ் வசதியை பெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய எம்ஜி ஹெக்டர் காரின் அடாஸ் தொகுப்பில், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்ஸன், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அஸிஸ்ட், ஸ்பீடு அஸிஸ்ட் சிஸ்டம், ரியர் டிரைவ் அஸிஸ்ட் மற்றும் இன்டலிஜென்ட் ஹெட்லேம்ப் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் (Honda City Hybrid) உள்ளிட்ட கார்களில் அடாஸ் வசதி வழங்கப்படுகிறது. அத்துடன் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova HyCross) காரிலும் அடாஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift) மாடலிலும் அடாஸ் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே புதிய எம்ஜி ஹெக்டர் காரில் அடாஸ் தவிர, 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் என இன்னும் ஏராளமான வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. அதிநவீன வசதிகள் கொண்ட காரை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதுதான் எம்ஜி நிறுவனத்தின் முக்கியமான சிறப்பம்சமே. இதன்படி 2023 எம்ஜி ஹெக்டர் காரும், போட்டியாளர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், சவாலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் புதிய எம்ஜி ஹெக்டர் காரின் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் (Mild Hybrid) இன்ஜின் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேபோல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களிலும் மாற்றங்கள் செய்யப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் டாடா ஹாரியர் (Tata Harrier) போன்ற கார்களுடன் 2023 எம்ஜி ஹெக்டர் போட்டியிடும். 2023 ஹெக்டர் கார் தவிர, ஓரளவிற்கு குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் தற்போது எம்ஜி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Most Read Articles
English summary
2023 mg hector suv confirmed to get adas features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X