இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இனி கிடைக்காதா? டொயோட்டா நிறுவனம் திடீரென செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் (Toyota Innova Hycross) வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த காரின் விலை (Price) வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், ஏற்கனவே விற்பனையில் இருந்து வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார், டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னோவா க்ரிஸ்ட்டா டீசல் (Diesel) காருக்கு புதிய முன்பதிவுகளை (Bookings) ஏற்பதையும் டொயோட்டா இந்தியா நிறுவனம் நிறுத்தியுள்ளது. இதனால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

இன்னோவா க்ரிஸ்ட்டா கார் இனி கிடைக்காதா? டொயோட்டா நிறுவனம் திடீரென செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி

இன்னோவா ஹைக்ராஸ் கார் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்படாது என்றுதான் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் முன்பதிவு நிறுத்தம், இணையதளத்தில் இருந்து நீக்கம் என அடுத்தடுத்து வரும் செய்திகள் வாடிக்கையாளர்களை குழப்பி கொண்டுள்ளன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று. எனவே அதன் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் கவலையையும் ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால் கவலையடைவதற்கும், குழப்பம் அடைவதற்கும் எதுவுமே இல்லை. ஆம், டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா காரை அப்டேட் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதுவும் புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா கார், டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் சேர்த்து, அப்டேட் செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா காரும் விற்பனை செய்யப்படும். எனவே ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

உதிரிபாகங்கள் சப்ளையில் தற்போது பிரச்னை இருப்பதாலும், செமி கண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறை இன்னமும் நீடித்து வருவதாலும்தான், இன்னோவா க்ரிஸ்ட்டா டீசல் காருக்கான முன்பதிவுகளை ஏற்பதை டொயோட்டா நிறுவனம் நிறுத்தியுள்ளது. எனவே இணையதளத்தில் இருந்து டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா நீக்கப்பட்டிருப்பது தற்காலிகமானதுதான். இன்னோவா க்ரிஸ்ட்டா டீசல் காரின் உற்பத்தி பணிகளை வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து டொயோட்டா நிறுவனம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மாதத்திற்கு 2,000 - 2,500 இன்னோவா க்ரிஸ்ட்டா டீசல் கார்களை உற்பத்தி செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேவையை பொறுத்தி உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டீசல் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னமும் நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது. எனவே டொயோட்டா நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்ட்டா டீசல் காரின் விற்பனையை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை.

2023ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் டீசல் இன்ஜினுடன் அப்டேட் செய்யப்பட்ட புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo 2023) திருவிழாவில், அப்டேட் செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா காரை டொயோட்டா நிறுவனம் காட்சிக்கு வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதே மேடையில் இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகளும் அறிவிக்கப்படலாம்.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், மேம்படுத்தப்பட்ட 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. பெரிய பனரோமிக் சன்ரூஃப், அடாஸ் தொழில்நுட்பம் என புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2023 toyota innova crysta diesel india launch details
Story first published: Sunday, November 27, 2022, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X