க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

மிட்சைஸ் எஸ்யூவி கார்களில் ஹூண்டாய் க்ரெட்டா கார் நல்ல விற்பனையாகி வரும் நிலையில் இதே செக்மெண்டில் 4 புதிய கார்களை அதன் போட்டி நிறுவனங்கள் களம் இறக்கத் தயாராகியுள்ளனர். இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

இந்தியாவில் சி- செக்மெண்டிற்கான கார்களுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த செக்மெண்டில் ஹூண்டாய் க்ரெட்டா கார் லீடிங்கில் இருக்கிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில் இதே கேட்டகிரியில் எம்ஜி நிறுவனத்தின் அஸ்டர், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் டைகுன், ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் ஆகிய கார்கள் மார்கெட்டில் உள்ளது.

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

இந்நிலையில் இந்த செக்மெண்ட் மீது மற்ற நிறுவனங்களின் பார்வையும் விழுந்துள்ளது. இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் இந்த செக்மெண்டில் மாருதி சுஸூகி , டொயோட்டா, ஹோண்டா, மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் தங்களது புது எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பிட்ட இந்த செக்மெண்டில் எதிர்காலத்தில் நல்ல விற்பனையிருக்கும் என்பதால் அந்த செக்மெண்டில் போட்டி அதிகமாகவுள்ளது.

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

தொடர்ந்து ஆட்டோமொபைல் குறித்துப் படிப்பவர்களுக்கு மாருதி சுஸூகி நிறுவனமும், டொயோட்டா நிறுவனமும் சேர்ந்து ஒரு புதிய சி செக்மெண்ட் காரை உருவாக்கி வருவது தெரியும். இந்த காரை அந்த நிறுவனங்கள் சேர்ந்து பிரத்தியேகமாக இந்தியாவிற்காகவே உருவாக்கி வருகின்றனர். இந்த நிறுவனம் சேர்ந்து உருவாக்கும் இந்த கார் இரண்டு நிறுவனங்கள் சார்பிலும் தனித்தனியாக விற்பனைக்கு வரும்

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

இரண்டு கார்களிலும் ஸ்டைலிங் மற்றும் வேறு வேறாக இருக்கும். ஆனால் காரின் மற்ற பாகங்கள் இன்ஜின் எல்லாம் ஒரே விதமாகவே இருக்கும். இதனால் இரண்டு நிறுவனங்களின் காரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியும். அதே நேரத்தில் இந்த கார்கள் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

இந்த கார் இரண்டு ஹைபிரிட் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆப்ஷன் மைல்டு ஹைபிரிட் மற்றொரு ஆப்ஷன் ஸ்ட்ராங்க் ஹைபிரிட் இந்த இரண்டு ஆப்ஷன் இன்ஜின்களும் இரண்டு நிறுவனத்தின் கார்களிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

இது போக இந்த கார் இந்த கேட்டகிரியிலேயே சிறந்த மைலேஜ் தரும் காராக அறிமுகாகும் என்றும். இது தான் இந்த காரின் விற்பனைக்கான யூஎஸ்பியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் பல பிரிமியர் அம்சங்கள் வேறு இடம் பெறப்போகிறதாம்.

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

அதன்படி இந்த காரில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், எலெக்ட்ரிக் சன் ரூப், கனெக்ட்டெட் கார் தொழிற்நுட்பம், வெண்டிலேட்டட் சீட்ஸ், ஏர்பேக்குகள், ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இ்நத காரை மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனம் வரும் தீபாவளியை மையமாக வைத்து வெளியிடும் என்றும் எதிர்பார்க்கலாம்

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

ஹோண்டா நிறுவனம் புதிய மிட் சைஸ் எஸ்யூவி கார் ஒன்றை இந்திய மார்கெட்டிற்காக உருவாக்கிவருகுிறது. இது அந்நிறுவனம் 2021 GIIAS-ல் அறிமுகப்படுத்திய RS கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 5ம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் கட்டமைப்பு அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் என்றும், இது 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல், மற்றும் 1.5 லிட்டர் ஹைபிரிட் பவர் டெரைன் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

இந்த காரின் ஹைபிரிட் ஆப்ஷனில் ஹோண்டா நிறுவனம் அதிகமான மைலேஜை தரும் காராக உருவாக்க முடிவு செய்துள்ளார். மேலும் அந்த காரில் பல சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த காரில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் திரை, செமி டிஜிட்டர்ல இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானாரோமிக் சன்ரூஃப், அடாஸ், இந்த கார் 2023ம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

டாடா நிறுவனமும் இந்த சி செக்மெண்டில் களம் இறங்கத் தயாராக உள்ளது. இந்நிறுவனம் 'Curvv' கான்செப்டில் கார்களை தொரிக்க முடிவு செய்துள்ளது. இதை முழுமையாக எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தவுள்ளது. அதே நேரத்தில் இதில் பெட்ரோல் டீசல் மற்றும் எலெக்ட்ரிக் இன்ஜின் ஆப்ஷன்களும் வரலாம் என எதிர்பார்க்கலாம். இந்த கார் 2024ம் ஆண்டு எலெக்டரிக் வெர்ஷனாக அறிமுகமாகும். பின்னர் fossil-fuel என இன்ஜின் கொண்ட காராக அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது.

க்ரெட்டாவை சுற்றி வளைக்கப் போடப்பட்ட பெரும் திட்டம்... தாக்குப் பிடிக்குமா ஹூண்டாய்...

எது எப்படியோ ஹூண்டாய் நிறுவனம் தற்போது க்ரெட்டா காரால் கொடி கட்டி பறந்து வரும் சி செக்மெண்டை தற்போது மற்ற நிறுவனங்கள் சுற்றி வளைத்து அந்த மார்கெட்டை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். இது ஹூண்டாய்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மார்கெட்டில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை எப்படித் தக்க வைக்கப்போகிறது. போட்டிகளை எப்படிச் சமாளிக்கப்போகிறது. போட்டியாளர்கள் தங்கள் கார்களை எப்படி சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

English summary
4 new cars planned to launch to compete with Hyundai Creta
Story first published: Sunday, May 15, 2022, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X