போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் டாடா நெக்ஸான் காரை வாங்குவதற்கு ஏன் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

கடந்த 2021-22ம் நிதியாண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் (Tata Nexon) பெற்றுள்ளது. மிகவும் கடுமையான போட்டி நிறைந்த செக்மெண்ட்டாக எஸ்யூவி செக்மெண்ட் உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) போன்ற வலுவான போட்டியாளர்களை இந்த செக்மெண்ட் கொண்டுள்ளது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

அப்படி இருக்கும்போது போட்டியாளர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்து இருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். குறிப்பாக ஹூண்டாய் க்ரெட்டாவை விற்பனையில் முந்தி சென்றிருப்பது எல்லாம் 'வேற லெவல்' ரகம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021-22ம் நிதியாண்டில், 1,24,130 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனம் வெறும் 1,18,092 க்ரெட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 2021-22ம் நிதியாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு இரண்டாவது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. நெக்ஸான் காரின் சிறப்பான விற்பனை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

சரி, டாடா நெக்ஸான் காரை ஏன் பலரும் விரும்புகின்றனர்? டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு காரணம் என்ன? அப்படி டாடா நெக்ஸான் காரில் என்னதான் இருக்கிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் இந்த செய்தி தொகுப்பு விடை அளிக்கிறது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் தற்போது கிடைக்க கூடிய மிகச்சிறந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாக கூடிய எலெக்ட்ரிக் கார் இதுவே.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கையும், வழக்கமான நெக்ஸான் ஐசி இன்ஜின் காரின் விற்பனை எண்ணிக்கையுடன் சேர்க்கப்படுகிறது. நெக்ஸான் எலெக்ட்ரிக் காரும் குறிப்பிடத்தக்க அளவில் எண்களை சேர்ப்பதால், ஒட்டுமொத்தமாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை மிகப்பெரியதாக உயர்ந்து விடுகிறது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பங்களிப்பு 11.6 சதவீதம் ஆகும். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

பாதுகாப்பு!

டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம் பாதுகாப்பு. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கிடைக்க கூடிய மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் உள்ளது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா நெக்ஸான் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

இன்னும் சொல்லப்போனால் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய கார் டாடா நெக்ஸான்தான். இதற்கு பிறகுதான் மற்ற இந்திய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற தொடங்கின. நெக்ஸான் காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறைய வசதிகளை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

இதன்படி ட்யூயல் ஏர்பேக்குகள், எலெக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், எலெக்ட்ரிக் ட்ராக்ஸன் கண்ட்ரோல், ரோல்-ஓவர் மிட்டிகேஷன், ஹைட்ராலிக் பிரேக் அஸிஸ்ட், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் போன்ற வசதிகள் டாடா நெக்ஸான் காரில் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்களில், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற இன்னும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக கொடுக்கப்படுகின்றன.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

இன்ஜின், கியர் பாக்ஸ்!

டாடா நெக்ஸான் காரில் பெட்ரோல், டீசல் என இரண்டு வகையான இன்ஜின்களுமே வழங்கப்படுகின்றன. டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் இந்த காரின் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியதாக உள்ளது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின்களுமே சிறப்பான பவர் அவுட்புட்டை கொண்டுள்ளன. அத்துடன் எரிபொருள் சிக்கனத்திலும் அவை தலைசிறந்து விளங்குகின்றன. இந்த இரண்டு இன்ஜின்களுடனும், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

வசதிகள்!

டாடா நெக்ஸான் காரின் மிகவும் சிறப்பாக இருப்பதற்கு மற்றொரு காரணம் அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள்தான். இதன்படி ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் போன்ற வசதிகளை டாடா நெக்ஸான் பெற்றுள்ளது.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

மேலும் எலெக்ட்ரிக் சன்ரூஃப், மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ரியர் ஏசி வெண்ட்கள், வாய்ஸ் அலர்ட்கள், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம், முன்பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் லெதர் சீட்கள் போன்ற வசதிகளும் டாடா நெக்ஸான் காரில் வழங்கப்படுகின்றன.

போட்டியாளர்களை அசால்டாக ஊதி தள்ளிய டாடா கார்... காரணம் என்னனு தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க

இதுபோன்ற அம்சங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் டாடா நெக்ஸான் காரை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தேர்வாக மாற்றுகின்றன. குறிப்பாக பாதுகாப்பிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது அதிக முக்கியத்துவம் வழங்குவதால், வரும் காலங்களில் டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

Most Read Articles

English summary
4 reasons why everyone s buying the tata nexon suv
Story first published: Wednesday, May 11, 2022, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X