ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

இந்திய சந்தையில் வருகின்ற ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள/வெளியிடப்படவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

இந்திய சந்தையில் நடப்பு ஜூன் மாதம், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் உள்பட பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய 2022 மாடல், நாளை (ஜூன் 30) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் ஜூன் மாதமும் நிறைவுக்கு வருகிறது.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

இதற்கு அடுத்த ஜூலை மாதமும் இந்திய சந்தையில் பல்வேறு கார்கள் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளன. நிறைய கார்கள் 'அன்வெய்ல்' (Unveil) செய்யப்படவும், அதாவது வெளியிடப்படவும் உள்ளன. எனவே ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள மற்றும் வெளியிடப்படவுள்ள புதிய கார்கள் தொடர்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) - ஜூலை 1

டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து ஒரு புத்தம் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரின் வெளியீட்டுடன் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. சுஸுகி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி கார், வரும் ஜூலை 1ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மைல்டு மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கும்.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரில், ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது. தற்போது வெளியாகி வரும் டீசர்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த காரில், ஸ்பிளிட் ஹெட்லேம்ப், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம் என தெரிகிறது.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

2022 ஆடி ஏ8எல் (2022 Audi A8L) - ஜூலை 12

ஆடி நிறுவனத்தின் முதன்மையான செடான்களில் ஒன்றான ஏ8எல் கார், ஃபேஸ்லிஃப்ட் மாடலை பெறுவதற்கு தயாராகி விட்டது. 2022 ஆடி ஏ8எல் ஃபேஸ்லிஃப்ட் கார், வரும் ஜூலை 12ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த மே மாதம் 5ம் தேதியே, ஆடி இந்தியா நிறுவனம் ஏ8எல் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

முன்பதிவு செய்வதற்கான தொகையே 10 லட்ச ரூபாய்! இந்த புதிய மாடலில், முன் பகுதி டிசைன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரீ-டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விர்ச்சூவல் காக்பிட்டிற்கு புதிய எம்ஐபி 3 ஆபரேட்டிங் சிஸ்டமும் (MIB 3 Operating System) கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

புதிய ஹூண்டாய் டூஸான் (New Hyundai Tucson) - ஜூலை 13

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை டூஸான் எஸ்யூவி காரை வரும் ஜூலை 13ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 2022 டூஸான் எஸ்யூவி காரின் வெளிப்புற புகைப்படங்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டு விட்டது. ஆனால் புதிய தலைமுறை டூஸான் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

புதிய தலைமுறை டூஸான் காரின் கேபினில், பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இன்னும் பல்வேறு வசதிகளும் கூடுதலாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என 2 வகையான இன்ஜின் தேர்வுகளும் 2022 ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் வழங்கப்படலாம்.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

சிட்ரோன் சி3 (Citroën C3) - ஜூலை 20

பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது கார் சி3. இந்திய சந்தைக்கான சிட்ரோன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி (Citroen C5 Aircross SUV) கார் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் நிலையில், சிட்ரோன் சி3 கார் விலை குறைவான மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

சிட்ரோன் சி3 காரை வாங்குவதற்கு விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். சிட்ரோன் நிறுவனத்தின் விலை குறைவான தயாரிப்பு என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், சி3 கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிட்ரோன் சி3 காரின் விலை எவ்வளவு? என்பது வரும் ஜூலை 20ம் தேதி நமக்கு தெரிந்து விடும்.

ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?

இந்திய சந்தையில் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வரும் டாடா பன்ச், மாருதி சுஸுகி இக்னிஸ், ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுக்கு சிட்ரோன் சி3 விற்பனையில் மிகவும் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயம் சரியாக இருந்தால், உண்மையில் இது நடக்கலாம்.

Most Read Articles
English summary
4 upcoming cars in july 2022
Story first published: Wednesday, June 29, 2022, 21:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X