புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

இந்திய சந்தையில் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

கிட்டத்தட்ட 2022ம் ஆண்டின் மத்திய பகுதிக்கு வந்துள்ளோம். அதற்குள்ளாகவே இந்திய சந்தையில் நிறைய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. இதை தொடர்ந்து இன்னும் நிறைய கார்கள் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில் நிறைய கார்கள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளன.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

அந்த கார்கள் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்திய சந்தையில் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும்.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ (ஸ்கார்பியோ-என்)

மஹிந்திரா நிறுவனம் இறுதியாக புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியை, ஸ்கார்பியோ-என் என்ற பெயரில் வரும் ஜூன் 27ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள ஸ்கார்பியோவை காட்டிலும் இந்த புதிய மாடல் பல்வேறு விதங்களில் மேம்பட்டதாக இருக்கும். குறிப்பாக சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும் இந்த எஸ்யூவி, 4 வீல் டிரைவ் ஆப்ஷனை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் நிறுவனம் வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாலில் உள்ள ஒரு சில ஹூண்டாய் டீலர்ஷிப்கள், வெனியூ சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏற்க தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

ஹூண்டாய் வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தொடர்ந்து, அதன் 'என் லைன்' மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. இது ஹூண்டாய் வெனியூ காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனாக இருக்கும். ஹூண்டாய் வெனியூ ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொறுத்தவரையில், பெரிய முன் பக்க க்ரில் அமைப்பு, ரீ-டிசைன் செய்யப்பட்ட ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

மேலும் முன் மற்றும் பின் பக்க பம்பர்களின் டிசைனும் ரீ-டிசைன் செய்யப்படவுள்ளது. இதுதவிர அலாய் வீல்களின் டிசைனும் மேம்படுத்தப்படவுள்ளது. ஆனால் இன்ஜின் தேர்வுகளில் மாற்றங்கள் செய்யப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்படும் இன்ஜின் தேர்வுகள் அப்படியே தொடர்ந்து வழங்கப்படலாம்.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

சிட்ரோன் சி3

சிட்ரோன் சி3 காரும் இந்திய சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய க்ராஸ்ஓவர் கடந்த ஆண்டே இந்தியாவில் வெளியிப்பட்டு விட்டது. இதன் மூத்த உடன்பிறப்பான சி5 ஏர்க்ராஸ் காரை மனதில் வைத்து இந்த சிறிய க்ராஸ்ஓவர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன இன்ஜின் வழங்கப்படவுள்ளது? என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

இருப்பினும் தற்போது வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். இந்த காரின் விலையை மிகவும் சவாலாக நிர்ணயம் செய்ய சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அனேகமாக டாடா பன்ச் மற்றும் நிஸான் மேக்னைட் கார்களை போல், இந்த காரின் விலையும் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்... ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ள கார்கள்... எல்லாமே நச்சுனு இருக்கு!

புதிய தலைமுறை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரை, ஜூன் மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகரித்து கொண்டே வரும் போட்டியை சமாளிப்பதற்கு விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடல் உதவி செய்யும் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Most Read Articles
English summary
4 upcoming cars in june 2022
Story first published: Saturday, May 21, 2022, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X