லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீரென சரிவடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரின் விலை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட உடனேயே மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. மஹிந்திரா நிறுவனமே திக்குமுக்காடி போகும் அளவிற்கு எக்ஸ்யூவி700 காருக்கு முன்பதிவுகள் குவிந்தன.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டு ஜனவரி மாதத்திலேயே 1 லட்சத்தை கடந்து விட்டது. இது மிகப்பெரிய எண்ணிக்கை என்பதால், முன்பதிவு செய்தவர்களுக்கு மஹிந்திரா நிறுவனத்தால் உடனடியாக எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்ய முடியவில்லை.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

இதனால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவுகிறது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எவ்வளவு எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டு சந்தையில் 4,494 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

எக்ஸ்யூவி700 போன்ற ஒரு பிரீமியமான காருக்கு இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான். ஆனால் ஏப்ரலுக்கு முந்தைய மார்ச் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் 6,040 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை 25.6 சதவீதம் குறைந்துள்ளது.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

இந்த சரிவிற்கு என்ன காரணம்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏராளமானோர் முன்பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில், உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

மஹிந்திரா மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில் இல்லை என்பதால், அந்த மாதத்துடன் நடப்பாண்டு ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஒன்றாகும். 155 பிஎஸ்/360 என்எம், 185 பிஎஸ்/420 என்எம், 185 பிஎஸ்/450 என்எம் என பல்வேறு வகையான ட்யூனிங்கில் இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இதுதவிர 200 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெற்றுள்ளது.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

இந்த இரண்டு இன்ஜின்களுடனும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை 13.18 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 24.58 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கிடைக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் 5 சீட்டர் வெர்ஷன், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் 7 சீட்டர் வெர்ஷன் டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்ற கார்களுடன் போட்டியிட்டு கொண்டுள்ளது.

லட்சக்கணக்கில் புக்கிங் குவிந்த நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனை திடீர் சரிவு... ஏன் தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் அடுத்து ஸ்கார்பியோ எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டே விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
4494 units of mahindra xuv700 sold in april 2022 here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X