மஹிந்திரா எல்லாம் ஓரமா நில்லு! மாருதி ஜிப்ஸி காரின் வாரிசு வருது! இது நம்ம ஆளுங்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு

மாருதி சுஸுகி ஜிப்ஸி காரின் வாரிசு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது, வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திரா எல்லாம் ஓரமா நில்லு! மாருதி ஜிப்ஸி காரின் வாரிசு வருது! இது நம்ம ஆளுங்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு

இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிப்ஸி (Maruti Suzuki Gypsy). மாருதி சுஸுகி ஜிப்ஸி காரை தெரியாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு இந்த கார், இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. குறிப்பாக இந்திய ராணுவத்தில் மாருதி சுஸுகி ஜிப்ஸி காரின் பயன்பாடு மிகவும் அதிகமாக காணப்பட்டது.

மஹிந்திரா எல்லாம் ஓரமா நில்லு! மாருதி ஜிப்ஸி காரின் வாரிசு வருது! இது நம்ம ஆளுங்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்ஸி காரின் விற்பனையை நிறுத்தி விட்டது. மிகவும் கடுமையான மாசு உமிழ்வு மற்றும் க்ராஷ் சேஃப்டி விதிமுறைகள் காரணமாகவே மாருதி சுஸுகி ஜிப்ஸி காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. இது மாருதி சுஸுகி ஜிப்ஸி காரின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மஹிந்திரா எல்லாம் ஓரமா நில்லு! மாருதி ஜிப்ஸி காரின் வாரிசு வருது! இது நம்ம ஆளுங்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு

எனினும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) கார் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக வெளியான தகவல்கள் ஜிப்ஸி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இது மாருதி சுஸுகி ஜிப்ஸி காரின் வாரிசு ஆகும். எனவேதான் மாருதி சுஸுகி ஜிம்னி கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திரா எல்லாம் ஓரமா நில்லு! மாருதி ஜிப்ஸி காரின் வாரிசு வருது! இது நம்ம ஆளுங்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு

இந்த சூழலில், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் 5 டோர் வெர்ஷன் வரும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி) நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி ஜிம்னி காரின் 5 டோர் வெர்ஷன் இந்திய சாலைகளில் சமீப காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மஹிந்திரா எல்லாம் ஓரமா நில்லு! மாருதி ஜிப்ஸி காரின் வாரிசு வருது! இது நம்ம ஆளுங்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு

இதுகுறித்த செய்திகள், மாருதி சுஸுகி ஜிம்னி காரின் இந்திய அறிமுகம் தொடர்பான எதிர்பார்ப்புகளை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள மாருதி சுஸுகி ஜிம்னி காரின் நீளம் 3,850 மிமீ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எல்லாம் ஓரமா நில்லு! மாருதி ஜிப்ஸி காரின் வாரிசு வருது! இது நம்ம ஆளுங்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு

அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1,645 மிமீ ஆகவும், உயரம் 1,730 மிமீ ஆகவும், வீல்பேஸ் நீளம் 2,550 மிமீ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள மாருதி சுஸுகி ஜிம்னி காரில், ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், K15C பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எல்லாம் ஓரமா நில்லு! மாருதி ஜிப்ஸி காரின் வாரிசு வருது! இது நம்ம ஆளுங்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு

இந்த இன்ஜின் புதிய தலைமுறை பிரெஸ்ஸா (New-gen Brezza), எர்டிகா (Ertiga) மற்றும் எக்ஸ்எல்6 (XL6) போன்ற மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரின் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட்களிலும் கூட இதே இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்கா போன்ற கார்களுடன் மாருதி சுஸுகி ஜிம்னி போட்டியிடும்.

Most Read Articles
English summary
5 door maruti suzuki jimny debut details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X