ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா? வேண்டாமா? இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க...

ஹூண்டாய் டுஸான் காரின் 4வது தலைமுறை கார் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த கார் 5 முக்கியமான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா ? வேண்டாமா ? இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க . . .

ஹூண்டாய் நிறுவனம் டுஸான் காரின் 4வது தலைமுறை காரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. ரூ27.69 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. டுஸான் கார்கள் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரிமியம் எஸ்யூவி கார்களாக விற்பனையாகி வருகிறது.புதிய 2022 ஹூண்டாய் டுஸான் காரில் ஏகப்பட்ட அப்டேட்களுடன் விற்பனையாகி வருகிறது.

ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா வேண்டாமா இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க . . .

ஹூண்டாய் நிறுவனம் 5000 டுஸான் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்த டுஸான் காரை இந்தியாவிற்கும் சிகேடி முறையில் அதாவது உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அதை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்கிறது.

ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா வேண்டாமா இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க . . .

இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடனும், டீசல் கார் 8 ஸ்பீடு பெட்ரோல் இன்ஜின் உடனும் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் ஹூண்டாய் டுஸான் கார் வாங்கலாமா வேண்டாமா எனச் சிலர் யோசித்துக்கொண்டிருப்பார்கள் அவர்களுக்கான 5 காரணங்களைக் காணலாம் வாருங்கள்

ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா வேண்டாமா இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க . . .

ஹூண்டாய் டுஸான் ஸ்டைலிங்

ஹூண்டாய் டுஸான் ஸ்டைலிங்கிற்காகவே பெயர் பெற்ற கார். இந்த காரின் முகப்பு பகுதியில் பாராமெட்ரிக் ஜூவல் டிசைன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஏஞ்சல் விங் எல் இடி டிஆர்எல்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பு தோற்றம் மாடர்னாக அமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் எல்இடி டெயில் லைட், அலாய் வீல் டிசைன், பின்புறம் உள்ள ஸ்பாய்லர்கள் இதன் போட்டிகளைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது.

ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா வேண்டாமா இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க . . .

சொகுசு வசதி

ஹூண்டாய் டுஸான் கார் உயரமாகவும், அகலமாகவும், நீளமாகவும் இருக்கிறது. இந்த காரில் உள்ள பெரிய வீல் பேஸ் பின் சீட்டில் உள்ள பயணிகளுக்குக் கால் வைக்க போதுமான இட வசதியை வழங்குகிறது. முன்பக்கம் எலெக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சீட் பெஆருத்தப்பட்டுளு்ளது. பின்பக்கமும் சொகுசான சீட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா வேண்டாமா இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க . . .

ADAS

Advanced Driver Assitance Systems என்ற ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் இந்த காரில் உள்ளது. இதற்காக முன்பக்கம் கேமரா, முன், பின் பக்கம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான தொழிற்நுட்ப வசதிகள் இந்த காரில் உள்ளன. குறிப்பாக லேன்களை கண்காணிக்கும் குருவி, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கேலீஸன் அலார்ட் ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளன.

ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா வேண்டாமா இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க . . .

இன்ஜின்

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை டீசல் இன்ஜின் 186 பிஎஸ் பவரையும் 416 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், ஆனால் பெட்ரோல இன்ஜின் 156 பிஎஸ் பவர் மற்றும் 192 என்எம் டார்க் திறனை மட்டுமே வெளிப்படுத்தும். இது ஒரு நெகட்டிவ் அம்சவமாவே தெரிகிறது.

ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா வேண்டாமா இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க . . .

விலை

இந்த காரின் லோயர் வேரியன்ட் ரூ27.69 லட்சத்தில் துவங்குகிறது. அதிகபட்சமாக ரூ 34.39 லட்சம் வரை செல்கிறது. பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய வெர்ஷன்கள் இருக்கின்றன. இரண்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்கள் கிடைக்கிறது. இது போக சிக்னேச்சர் வேரியன்டில் 4வீல் டிரைவ் ஆப்ஷன் முக்கியமான அம்சமாக இருக்கிறது.

Most Read Articles
English summary
5 important points to know before buying Hyundai Tucson
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X