இனி சப்காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவு டாடா கையில்! விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைத்த நெக்ஸான்!

இனி சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவு டாடா (Tata Motors) கையில் என கூறுமளவிற்கு அந்நிறுவனத்தின் நெக்ஸான் (Nexon) காருக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முதன்மையான கார் மாடல்களில் நெக்ஸான் (Nexon)ம் ஒன்று. இது ஓர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கே தற்போது இந்தியாவில் பல மடங்கு மவுசு அதிகரித்துக் காணப்படுகின்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை நெக்ஸான் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதனால் உற்பத்தியிலும் இக்காரால் சாதனைப் படைக்க முடிந்திருக்கின்றது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இக்காரின் 2 லட்சமாவது யூனிட் விற்பனைக்காக வெளியேற்றப்பட்டது.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

இதையடுத்து, அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே 3 லட்சம் யூனிட் தயாரிப்பு என்ற மைல்கல் சாதனையை நெக்ஸான் எட்டியது. இந்த சம்பவம் அரங்கேறி 7 மாதங்களே தற்போது ஆகின்ற நிலையில் அதே டாடா நெக்ஸான் 4 லட்சம் யூனிட் உற்பத்தி என்ற வரலாற்று சாதனையைப் படைத்திருக்கின்றது. இதுகுறித்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக டாடா மோட்டார்ஸ் அதன் 4 லட்சமாவது யூனிட் நெக்ஸான் காரை ஆலையில் இருந்து வெளியேற்றும் படத்தை வெளியிட்டுள்ளது.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

இதன் வாயிலாக டாடா நெக்ஸான் காருக்கு மிக மிக அமோக வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலை 2017ம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இருப்பினும், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே நெக்ஸானுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், இந்த கார் அதீத பாதுகாப்பு திறன் கொண்டது என்கிற தகவல் வெளியாகிய பின்னரே மக்கள் நெக்ஸான் சாய தொடங்கியிருக்கின்றனர். குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் டாடாவின் இந்த தயாரிப்பு ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

பாதுகாப்பு விஷயத்தில் இந்த சூப்பரான ரேட்டிங்கை நெக்ஸான் பெற்றதன் விளைவாக 2019 பிப்ரவரியில் 20 சதவீத விற்பனை வளர்ச்சியை அது பெற்றது. அந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 5,263 யூனிட்டு நெக்ஸான் கார்கள் விற்பனையாகின. இந்த எண்ணிக்கையே தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளது. 2022 ஆகஸ்டு மாத நிலவரப்படி டாடா நெக்ஸான் அதிகபட்சமாக 15,085 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

இது 2021 ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் 50.76 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கையாகும். இந்த மாதத்தில் 10,006 யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனையாகியது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக விற்பனையில் வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் டாடா நெக்ஸான் தற்போது 4 லட்சம் யூனிட் உற்பத்தி என்ற இலக்கை எட்டியிருக்கின்றது.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

மேலும், நாட்டிலேயே இரண்டாவதாக அதிகம் விற்பனையாகும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக வாகனம் என்ற மகுடத்தையும் நெக்ஸான் சூடியிருக்கின்றது. முதல் இடத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி பிரெஸ்ஸாவிற்கு மட்டுமின்றி ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் இக்கார் போட்டியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

இப்போதைய நிலவரப்படி டாடா நெக்ஸான் ரூ. 7.50 லட்சம் தொடங்கி ரூ. 14 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காரை, மின்சார வெர்ஷனிலும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எல்லாருமே டாடாவின் இந்த தயாரிப்பை வாங்க தொடங்கிட்டாங்க போல... விற்பனையில் மட்டுமல்ல உற்பத்தியிலும் சாதனை படைச்சிருக்கு!

இந்த மாதிரியான சூழலிலேயே டாடா நெக்ஸானில் கிடைத்துக் கொண்டிருக்கும் தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்யும் வகையில் அந்நிறுவனம் புதிய எக்ஸ்எல் பிளஸ் (எல்) வேரியண்டை அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை ரூ. 11.38 லட்சம் ஆகும். நெக்ஸான் எஸ்யூவி காரை ஜெட் எடிசன் மற்றும் காஸிரங்கா எடிசன் ஆகிய சிறப்பு பதிப்புகளிலும் டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
5 star safety rated nexon achieves 4 lakh unit production milestone
Story first published: Wednesday, September 21, 2022, 16:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X