டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க

டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரில் புதிதாக கேமோ எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த கார் குறித்து நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களைப் பற்றிக் காணலாம்.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று இது டாடாட நிறுவனம் முதல் மைக்ரோ எஸ்யூவி காராகும். மாதம் 11 ஆயிரம் கார்கள் வரை விற்பனையாகிறது. ரூ10 லட்சத்திற்குக் குறைவாக இதன் விலை இருப்பதால் மக்கள் அதிகம் இந்த காரை வாங்குகின்றனர்.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

இந்த கார் வெளியாகி 1 ஆண்டு ஆன நிலையில் இந்த காரின் புதிய எடிசனாக கேமோ எடிசன் காரை இந்நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ6.85 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் குறித்த டாப் 5 தகவல்களைத் தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

வெளிப்புற தோற்ற மாற்றம்

இ்நத காரின் அப்டேட்டை பொருத்தவரை பழைய காரில் இல்லாத ஒரு கலராக புதிய ஃபோலியேஜ் கிரீன் நிறத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டூயல் டோன் தீம்கள் உள்ளன.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

பியானோ பிளாக் அல்லது பிரிஸ்டின் ஒயிட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிறம் டூயல் டோன் தீமாக இருக்கும். இது போக முன்பக்க க்ரோம் க்ரில் புதிதாகக் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பரில் புதிதாக சில்வர் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அலாய் வீல் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்க ஃபென்டரில் கேமோ பேட்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

உட்புற கட்டமைப்பு

இந்த கேமோ எடிசன் காரில் உட்புற கட்டமைப்பில் மாற்றங்கள் குறைவாகத்தான் செய்யப்பட்டுள்ளது. உட்புறம் மிலிட்டரி க்ரீன் ஷேடில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பழைய காரின் அதே டேஷ்போர்டு லேஅவுட், சொகுசான முன்புறம் மற்றும் பின்புற சீட்கள், இதன் பூட் மற்றும் காரின் உட்புற இட வசதியும் பழைய காரில் உள்ளது போலவே இந்த காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

அம்சங்கள்

இந்த கேமோ எடிசன் கார் பஞ்ச் காரின் மிட் வேரியன்ட்களான அட்வெஞ்சர் மற்றும் அக்கம்பிளிஷ் வேரியன்ட்ளில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரிதம் மற்றும் டேஸில் பேக்களை தேவைப்பட்டால் இணைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

இந்த காரில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ரிவர்ஸ் பார்க்கிங், எல்இடி டிஆர்எல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்க ஃபாக் லைட்கள் இந்த காரிலும் உள்ளன.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

இன்ஜின்

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 86 எச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டாடா பஞ்ச் காரின் அடுத்த அப்டேட்டாக டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டாடா பஞ்ச் கேமோ காரை வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க . . .

வேரியன்ட்கள்

டாடா பஞ்ச் கேமோ எடிசன் காரை பொருத்தவரை மொத்தம் 4 விதமான வேரியன்ட்கள் இருக்கின்றன. அட்வெஞ்சர், அட்வெஞ்சர் ரிதம், அக்கம்பிளிஷ்டு, அக்கம்பிளிஷ்டு டேஸில் ஆகிய வேரியன்ட்களில் வெளியாகிறது. இந்த கார் மார்கெட்டில் மாருதி இக்னீஷ், மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி, நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுக்கு பேட்டியாகக் களம் இறங்குகிறது.

Most Read Articles

English summary
5 things you want to know about tata punch camo edition car
Story first published: Saturday, September 24, 2022, 19:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X