சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

50,000 ஆவது நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து வெற்றிக்கரமாக முழுவதும் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நிஸான் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

ஜப்பானிய நிஸானும், ரெனால்ட்டும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ரெனால்ட் நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சென்னையில் வாகன தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்துதான் மற்ற நிஸான் கார்களை போல் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி கார்களும் தயாரிக்கப்பட்டு டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

இந்த நிலையில் தற்போது வெற்றிக்கரமாக மேக்னைட் கார்களின் தயாரிப்பில் நிஸான் 50,000 என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவு கடந்த சில வருடங்களில் பலத்த போட்டி மிகுந்ததாக மாறியுள்ளது. அத்தகைய பிரிவில் நிஸான் நிறுவனம் கடந்த 2020இன் இறுதியில் மேக்னைட்டை அறிமுகப்படுத்தியது. இந்த வகையில் பார்த்தோமேயானால், வெறும் 1.5 வருடங்களில் இத்தகைய 50,000 என்கிற மைல்கல்லை நிஸான் அடைந்துள்ளது.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

நிஸானின் நெக்ஸ்ட் மாற்றத்திற்கான திட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளிவந்த முதல் உலகிற்கான தயாரிப்பாக மேக்னைட் விளங்குகிறது. அதாவது உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, நிஸான் மேக்னைட் கார்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் தயாரிப்பில் 50,000 என்கிற மைல்கல்லை கடந்திருப்பது குறித்து நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சினன் ஒஸ்காக் கருத்து தெரிவிக்கையில், ""மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்" எஸ்யூவியான மேக்னைட் ஆனது நிஸானின் உலகளாவிய உருமாற்ற உத்தியின் கீழ் ஒரு முக்கிய மாடலாக உள்ளது.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

அளவில் பெரிய, கம்பீரமான, அழகான இந்த எஸ்யூவி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிஸானின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிஸான் மேக்னைட்டை இந்தியாவிலும், உலகளாவிய சந்தைகளிலும் அமோக வெற்றியடைய செய்ததற்காக எங்கள் வாடிக்கையாளர்கள், வணிக கூட்டணி நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

2020இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கொரோனா வைரஸ் பரவல், குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை என மேக்னைட்டின் தயாரிப்பு பணிகளில் பல்வேறு விதமான இடையூறுகளை நிஸான் சந்தித்தது. கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மேக்னைட் எஸ்யூவி பெரியவர்களின் பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

இவ்வாறு தரமான கட்டமைப்பில் வடிவமைக்கப்படுவதால், மேக்னைட் காரை நகர்புற சாலை பயணங்களில் இருந்து சறுக்கல்களை அதிகம் கொண்ட சாலைகளுக்கும் தாராளமாக கொண்டு செல்லலாம் என்கிறது நிஸான். 'இந்திய சந்தையில் சிறந்த திருப்புமுனை வாகனம்', '2021ஆம் ஆண்டிற்கான சிறந்த காம்பெக்ட் எஸ்யூவி' மற்றும் 'வருடத்தின் சிறந்த கேம் சேஞ்சர்' என ஏகப்பட்ட விருதுகளை மேக்னைட் அறுவடை செய்துள்ளது.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

இந்தியாவை தொடர்ந்து கடந்த 2021இல் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனிஷிய நாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிஸான் மேக்னைட் தற்சமயம் நேபாளம், பூடான், வங்காள தேசம், இலங்கை, ப்ரூனை, உகாண்டா, கென்யா, டான்சானியா, சீஷெல்ஸ், மொசாம்பிக், மொரீஷியஸ் மற்றும் மலாவி என ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பிரிவிலேயே குறைந்த பராமரிப்பு செலவை கொண்ட காராக விளங்குவதாக நிஸான் தெரிவிக்கிறது. இந்த காரில் முதல் 50,000 கிமீ பயணத்திற்கு ஒரு கிமீ-க்கு வெறும் 30 பைசா மட்டுமே பராமரிப்பிற்காக செலவாகிறதாம். இந்த காருக்கு 2 வருட/ 50,000 கிமீ உத்தரவாதத்தை நிஸான் நிறுவனம் வழங்குகிறது. இதனை 5 வருட/ 100,000 கிமீ ஆகவும் விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் நீட்டித்து கொள்ள முடியும்.

சென்னை தொழிற்சாலையில் 50,000ஆவது நிஸான் மேக்னைட் கார் வெளியேற்றம்!! இந்தியாவில் தயாரிக்கப்படும் உலகிற்கான கார்

தனி பயன்பாட்டிற்காக மேக்னைட்டை வாங்குவோருக்காக ஏகப்பட்ட மாதத்தவணை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், டெல்லி என்சிஆர், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 'பை பேக் ஆப்ஷன்' (Buy Back Option)-னும் வழங்கப்படுகிறது. மேக்னைட் எஸ்யூவி காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.76 லட்சங்களில் இருந்து ரூ.10.20 லட்சங்கள் வரையில் உள்ளன.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
50000th big bold beautiful nissan magnite rolls out
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X