சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா!! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசைப்படுவீங்க!..

ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையில் சிட்ரோன் சி3 (Citroen C3) கார் மாடல் டெலிவரி கொடுக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு எங்கு அரங்கேறியது? காரின் சிறப்புகள் என்ன என்பது போன்ற பல்வேறு முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

சிட்ரோன் (Citroen) அறிமுகம் செய்த தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா என ஆச்சரியப்படும் அளவிற்கு அந்நிறுவனத்தின் கார் ஒன்றிற்கு இந்திய சந்தையில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. பிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் மிக சமீபத்தில் சி3 (C3) எனும் புதுமுக கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

இந்தியாவில் கால் தடம் பதித்து வெகு நாட்களாக ஒற்றை கார் மாடலை மட்டுமே அந்நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வந்தது. சி5 ஏர்கிராஸ் எனும் எஸ்யூவி ரக காரை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்தது. நிறுவனத்தின் மிக உயரிய விலைக் கொண்ட பிரீமியம் தர கார் இதுவாகும். ஆகையால், இந்தியாவின் பிரீமியம் வாகன பிரியர்கள் மத்தியில் மட்டுமே சி5 ஏர்கிராஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், அது நிறுவனத்திற்கு போதுமானதாக அமையவில்லை.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

இந்த நிலையிலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் திகைத்து போக செய்கின்ற வகையில் சிட்ரோன் நிறுவனம் அதன் சி3 எனும் புதுமுக காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த வாகனத்திற்கு யாரும் எதிர்பார்த்திராத வகையில் மிகக் குறைவான விலையை அது நிர்ணயித்தது. ரூ. 5.70 லட்சம் என்ற விலையையே சிட்ரோன் நிர்ணயித்துள்ளது. இத்தகைய மிகக் குறைவான விலையில் சி3 விற்பனைக்கு வந்திருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

கவனத்தை மட்டும் அது ஈர்க்க செய்யலிங்க, பலரை வாங்கவே செய்திருக்கின்றது சிட்ரோன் சி3. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. அதாவது, ஒரே நாள், ஒரே நேரத்தில் 75 யூனிட்டுகள் சிட்ரோன் சி3 கார் மாடல்கள் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 75 யூனிட்டுகள் சி3 கார்கள் டெலிவரிக் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்ததது.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

டெல்லியில் உள்ள சிட்ரோன் கார் விற்பனையாளர் ஒருவர் வாயிலாக இந்த அனைத்து யூனிட்டுகளும் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு மெகா கொண்டாட்டம் போல் நிறுவனத்தின் வாயிலாகக் கொண்டாடப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் டெல்லியில் அசோக் ஹோட்டலிலேயே நடைபெற்றது. வெவ்வேறு டீலர்கள் வாயிலாக சி3 காரை புக் செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இங்கு வைத்த சி3 கார் ஒப்படைக்கப்பட்டது.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

இன்னும் பலர் இந்த காரை டெலிவரி பெறுவதற்கு புக் செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். எஸ்யூவி தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் ஹேட்ச்பேக் ரக கார் இதுவாகும். மிகவும் அட்டகாசமான தோற்றத்தில் இக்காரை சிட்ரோன் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்தியர்களுக்காக இந்தியாவில் வைத்து இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருந்தாலும் பிரெஞ்சு இன்ஜினியரிங் மற்றும் டிசைனை இக்காரில் அது பயன்படுத்தியிருக்கின்றது.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

ஆகையால், கவர்ச்சிக்கு சற்றும் குறைவில்லாத காராக சி3 காட்சியளிக்கின்றது. ஆகையால், இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் இக்காரை வாங்க தொடங்கியிருக்கின்றனர். நிறுவனம் இந்த காரை இரு விதமான பெட்ரோல் மோட்டார் தேர்வில் விற்பனைக்கு வழங்குகின்றது. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையரேடட் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

இதில் டர்போ மோட்டாரே அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. அது, 109 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. நேச்சுரல்லி அஸ்பைரேடட் மோட்டாரானது 81 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு எம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் சி3 இல் வழங்கப்படுகின்றன.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

இந்தியாவில் சிட்ரோன் சி3 கார் 5.70 லட்ச ரூபாய் தொடங்கி ரூ. 8.05 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த குறைவான விலையிலேயே பல்வேறு சிறப்பு வசதிகளை சி3 காரில் வழங்கியிருக்கின்றது சிட்ரோன். 10.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஒயர்லெஸ் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), 4 ஸ்பீக்கர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என பற்பல அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது.

சிட்ரோன் தயாரிப்பிற்கு இப்படி ஒரு வரவேற்பா! விலை எவ்வளவு தெரிஞ்சா நீங்களும் புக் பண்ண ஆசப்படுவீங்க... ரொம்ப கம்மி!

இதுபோன்று மிக தாராளமான அம்சங்களைக் கொண்டிருப்பதாலும், அதிக கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருப்பதாலும், மேலும், மிகக் குறைவான விலையில் கிடைக்கின்ற காரணத்தினாலும் இந்தியாவில் சி3 ஃபேமஸாக தொடங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாள், ஒரே நேரத்தில் 75 யூனிட்டுகள் சி3 கார்கள் தலை நகர் டெல்லியில் டெலிவரிக் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
75 units citroen c3 car delivered in single day to celebrate 75th independence day
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X