இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது... நீங்க எதை வாங்க போறீங்க ?

இந்தியாவில் இந்தாண்டு 8 புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த கார்களின் பட்டியலையும், அந்த கார்களின் தொழிற்நுட்ப தகவல்களையும் இங்கே காணலாம் வாருங்கள்

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

இந்தியாவில் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்கெட் அதிகமாகிவிட்டது. ஸ்கூட்டர், கார்கோ வாகனங்களில் துவங்கிய இந்த மார்கெட் மாற்றம் தற்போது எலெக்ட்ரிக் கார் உலகிலும் புகுந்துள்ளது. இது மாற்றம் மெதுவாக நடந்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

இதனால் மக்கள் மத்தியில் புதிய புதிய அம்சங்களுடனான எலெக்டரிக் கார் குறித்த தேடல் அதிகமாகிவிட்டது. இந்த தேடலுக்குத் தீனி போடும் வகையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிது புதிதாக எலெக்டரிக் வாகனங்களை உருவாக்கத் துவங்கிவிட்டனர். அந்த வகையில் இந்த பட்டியில் நாம் இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டிலேயே வெளியாகவுள்ள 8 எலெக்டரிக் கார்களை பற்றிக் காணப்போகிறோம்.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

கியா இவி6

கியா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்டரிக் காராக இந்த காரை அறிமுகப்படுத்துகிறது. இது வரும் ஜூன் 2ம் தேதி மார்கெட்டில் அறிமுகமாகிறது. இந்த காரை கியா நிறுவனம் முழுவதும் வெளிநாட்டில் வடிவமைக்கப்பட்ட காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஜிடி-லைன், ஜிடி-லைன்-AWD ஆகிய இரண்டு வேரியன்ட்களில் வருகிறது. இரண்டு வேரியன்டிலும் 77.4 kWh பேட்டரி இருக்கும். இதில் ஜிடி-லைன் கார் 229 பிஎஸ் பவரை வெளிப்படுத்துகிறது. ஜிடி-லைன்-AWD 325 பிஎஸ் பவரை வெளிபடுத்துகிறது.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

ஹூண்டாய் ஐகானிக் 5

ஹூண்டாய் நிறுவனம் ஐகானிக் 5 எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்தை இந்தாண்டு இரண்டாம் பாதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை இந்தியாவில் சிகேடி முறையில் அதாவது உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அதை இந்தியாவிற்குள் அசெம்பிள் செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால் இதன் விலை சற்று குறைவாக இருக்கும். இந்த காரில் உள்ள தொழிற்நுட்ப தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

ஹூண்டாய் கோனா இவி பேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வரும் நிலையில் அதில் அப்டேட்ட செய்யப்பட்ட பேஸ்லிஃப்ட் காரை இந்தாண்டு அறிமுகப்படுத்துகிறது. புதிதாக அறிமுகமாகவுள்ள காரில் டிசைனில் மட்டுமே மாற்றம் இருக்கிறது. பவர்டெரையன் விஷயத்தில் மாற்றம் இல்லை. இந்த காரில் 39.2kWh பேட்டரி உள்ளது. இது 136 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ்

வால்வோ எக்ஸ்சி 40 ரீசார்ஜ் கடந்த 2021ம் ஆண்டே வெளியாக வேண்டியது ஆனால் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போக, இந்தாண்டு இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜில் 418 கி.மீ பயணிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் உடன் வருகிறது. இது 408 பிஎஸ் பவரை வெளிப்படுத்துகிறது.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

மஹிந்தியா இகேயூவி 100

மஹிந்தியா நிறுவனம் கேயூவி 100 கம்பஷன் இன்ஜின் கார்களை விற்பனை செய்து வெற்றிபெற்ற நிலையில் அந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிமுகம் இந்தாண்டு இறுதியில் நடக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 15.9 kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இதில் உள்ள மோட்டார் 54.4 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இந்த கார் முழு சார்ஜில் 150 கி.மீ பயணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ்

மெர்சிடிஸ் நிறுவனம் இந்தாண்டு ஈக்யூஎஸ் சொகுசு செடான் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி இது அந்நிறுவனத்தின் எஸ் கிராஸ் காராக இந்த கார் அறிமுகமாகிறது. இந்த காரில் 107.8kWh பேட்டரி இருக்கிறது. இது முழு சார்ஜில் 700 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாகத் தெரிகிறது. இந்த கார் இந்தியாவிலேயே தயாரிக்கவோ, அசெம்பிள் செய்யவோபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதன் விலை வெகுவாக குறையும். இந்தாண்டு இந்த கார் அறிமுகமாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

டாடா ஆல்ட்ராஸ் இவி

டாடா நிறுவனம் வெளியிட்ட ஆல்ட்ராஸ் காரின் கம்பஷன் இன்ஜின் கார் வெற்றி பெற்ற நிலையில் அந்த காரில் எலெக்டரிக் வேரியன்டை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டது. முதலில் இந்த கார் 250-300 கி.மீ வரை பயணிக்கும் திறனுடன் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த காரில் உள்ள பேட்டரி, மோட்டார் உள்ளிட்ட எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த காரும் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது . . . நீங்க எதை வாங்க போறீங்க ?

எம்ஜி - என்டரி லெவல் இவி

எம்ஜி மோட்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் லைன் அப்பில் இந்திய மார்கெட்டிற்காக 2 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இரண்டில் ஒன்று எலெக்ட்ரிக் ஹேட்ச் பேக் காராகவும் மற்றொன்று எலெக்ட்ரிக் எஸ்யூவி காராகவும் அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு கார்களும் இந்தாண்டு இறுதி அல்லது 2023ம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
8 cars lined up for launch in 2022 know full details
Story first published: Saturday, May 28, 2022, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X